
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என அவரது கட்சிக்காரர்களோ, அவரது நலன் விரும்பிகளோ சொல்லலாம். ஆனால் நோபல் பரிசுக் கமிட்டியில் உள்ள ஒரு நபர் கூறினால் எப்படி இருக்கும்? அது தான் தற்போது நடந்திருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிக வலுவான போட்டியாளராக இருக்கிறார் என கடந்த புதன்கிழமை பேசியுள்ளார் நோபல் பரிசுக் கமிட்டியின் துணைத் தலைவர் (Deputy Leader) Asle Toje .
மேலும், ஒரு போரை நிறுத்துவதற்கான மிக நம்பகமான தலைவராக நரேந்திர மோடி இருப்பதாகவும், அவரால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் கூறினார்.
ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூட, அமைதிக்கான மிக நம்பகமான முகம் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் கூறினார் Asle Toje.
பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம், இந்தியாவை ஒரு செல்வச் செழிப்பான நாடாகவும், பலம் வாய்ந்த நாடாகவும் உருவாக்கும் பாதையில், அவருடைய கொள்கைகள் அமைந்திருப்பதாக எல்லாம் பாராட்டியதாக டைம்ஸ் நவ் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்தியா தொடர்ந்து அமைதியை வலியுறுத்திய நாடாகவே இருந்துள்ளது, ஒரு நாள் அது உலகின் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்றும் குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா & உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர, இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதையும் Asle Toje சுட்டிக் காட்டியுள்ளார்.
"ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்டுத்தினால் ஏற்படும் எதிர்வினைகள் & பக்கவிளைவுகளை, இந்தியா தலையிட்டு அவர்களுக்கு நினைவுபடுத்தியது மிகவும் உதவிகரமாக இருந்தது.
இந்தியா உரத்த குரலில் பேசவில்லை, எவரையும் அச்சுறுத்தவில்லை, இந்தியா தன் நிலைப்பாட்டை நட்பு ரீதியில் தெளிவுபடுத்தியது.
இது போன்ற விஷயங்கள் தான் சர்வதேச அரசியலில் அதிகம் தேவை" என Asle Toje, ஏ என் ஐ செய்தி முகமையிடம் வியாழக்கிழமை கூறியதாக பல்வேறு வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உலகின் புகழ்பெற்ற அரசியல் விஞ்ஞானிகளில் ஒருவர். பல நாடுகளின் கொள்கைகளை பகுத்தாய்வு செய்யும் இவர், நார்வே நாட்டைச் சேர்ந்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம், நார்வேயன் அகாடமி ஆஃப் சயின்ஸ் & லெட்டர்ஸ் போன்ற அமைப்புகள் & நிறுவனங்களில் விசிட்டிங் பேராசிரியராகவும் இருக்கிறார்.
நார்வேயன் நோபல் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பதவியில் இருக்கிறார். இந்த கமிட்டி தான் யாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இப்போது இந்த கமிட்டி இந்தியாவில் இருக்கிறது.
Asle Toje ஆஸ்லோ பல்கலைக்கழகத்திலும், ட்ராம்சோ பல்கலைக்கழகத்திலும் படித்ததாகவும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாகவும் அவருடைய வலைதளம் சொல்கிறது. இதே Asle Toje நபர் கடந்த 2020ஆம் ஆண்டு ரைசினா டயலாக் கூட்டத்தில் பேசினார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
ஆனால் இந்த செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust