
உலகம் முழுவதும் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களை பற்றி ஆராய்ந்து பார்க்கையில் பல மர்மங்கள், அதிசயம் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவ அடையாளம் கிடைக்கிறது.
அப்படி இந்தியாவின் முக்கிய வணிக நகரமாக இருக்கும் மும்பையின் மலபார் மலைபகுதியில் இருக்கும் சைலன்ஸ் கோபுரங்கள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
பொதுவாக கோபுரங்கள் (டவர்கள்) என்றால் இதனை கண்டு வியப்பார்கள், ஆனால் இந்த பகுதியில் உள்ள கோபுரங்களுக்கு அருகில் மக்கள் செல்ல பயப்படுகின்றனர்.
அதற்கு காரணம், அந்த டவரின் உச்சி பகுதியில் இறந்த பிணங்கள் கழுகளுக்கு உணவாக வைக்கப்படுகிறது.
இந்த பழக்கத்தை ஜோராஸ்ட்ரியர்கள் பின்பற்றுகின்றனர்.
ஜோராஸ்ட்ரியர்கள், இறந்தவர்களை புதைப்பதில்லை, தகனம் செய்வதில்லை மாறாக சடலங்களை ’அமைதி கோபுரங்கள்’ எனப்படும் உயரமான கோபுரங்களில் மேல் வைத்துவிடுகின்றனர்.
புதைப்பது மற்றும் தகனம் செய்வது சுற்றுசூழலை மாசுபடுத்தும் என அவர்கள் நம்புகின்றனர். அதனால் இறந்த மனிதர்களின் உடல்களை இந்த கோபுரங்களின் மீது அதாவது டவர்ஸ் ஆஃப் சைலன்ஸ்' மேல் வைத்து விடுவார்கள். இறந்த உடல்களுக்கு கழுகுகள் வைத்து அவர்கள் இறுதி சடங்குகளை நடத்துகின்றனர்.
சுமார் 300 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோபுரங்கள் பிணங்களை வைக்க தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிணங்களை வரிசைபடுத்த அதாவது வெளிப்புற வரிசை ஆண்களுக்காவும் உட்புறம் குழந்தைகளுக்காவும் மையப்பகுதி பெண்களுக்காவும் ஒதுக்கப்பட்டு நடுவில் 150 அடி விட்டத்தில் ஒரு கிணறு அமைக்கப்படும்.
ஜோராஸ்ட்ரியர்களின் இன்றியமையாத உடன்படிக்கை என்னவென்றால், பூமி, நெருப்பு, காற்று மற்றும் நீர் ஆகிய நான்கும் இறந்த உடல்களால் தீட்டுப்பட்டு விடக்கூடாது. எனவே, கழுகுகள் பிணங்களை உண்பதே நியதி என நம்பினர்
தற்போது இந்த கோபுரங்களில் பிணங்களை வைக்கும் சடங்கு முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் இந்த கோபுரங்கள் தற்போது வரை அச்சமூட்டும் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust