Kunal Shah: ”என் மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் தான்” - CRED Founderஐ விமர்சித்த நெட்டிசன்கள்

“கிரெட் நிறுவனம் லாபகரமாக இயங்கும் வரை நான் நல்ல சம்பளத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நான் கருதுகிறேன். கிரெட் நிறுவனத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாயை சம்பளமாகப் பெறுகிறேன்“ என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் குணால் ஷா.
CRED CEO Kunal Shah Reveals His Salary, Sparks Debate On Internet
CRED CEO Kunal Shah Reveals His Salary, Sparks Debate On InternetTwitter

ஒரு நல்ல ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியவர் என்றால், அவருடைய மாத சம்பளம் சில பல லட்சங்கள் தொடங்கி, பல கோடி ரூபாய் வரை செல்லும்.

ஆனால் கிரெட் என்கிற ஃபின்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, மாதம் 15 ஆயிரம் ரூபாயை மட்டுமே சம்பளமாக பெறுவதாக தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை அஜித் பட்டேல் என்கிற நபர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த போது, நெட்டிசன்கள் குணால் ஷாவை அடித்து துவைத்துவிட்டனர்.

என்ன பதிவு?

குணால்ஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் “என்னிடம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்” என்கிற தலைப்பில் பல்வேறு நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அப்படி ஒரு பயனர் “நீங்கள் கிரெட் (CRED) நிறுவனத்தில் வாங்கும் சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது? அதை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார்.

“கிரெட் நிறுவனம் லாபகரமாக இயங்கும் வரை நான் நல்ல சம்பளத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நான் கருதுகிறேன். கிரெட் நிறுவனத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாயை சம்பளமாகப் பெறுகிறேன். முன்பு ஃப்ரீ சார்ஜ் என்கிற நிறுவனத்தை விற்று நல்ல பணம் பார்த்தவன் என்பதால் என்னால் வாழ்க்கையை எளிதாக நடத்த முடிகிறது” என சமூக வலைதளத்தில் பதில் கொடுத்திருந்தார் குணால் ஷா.

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி ஜாக் டார்சி கூட, ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலரை மட்டுமே சம்பளமாக பெற்று வந்தார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

சரி விஷயத்துக்கு வருவோம்! ஆஹா ஒரு நிறுவனத்தின் தலைவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், தன் நிறுவனம் லாபம் ஈட்டும் வரை நல்ல சம்பளத்தை எடுத்துக் கொள்ளாத உத்தமராக இருக்கிறாரே என்று பரவலாக பாராட்டுவார்கள் என்று பார்த்தால்… வரி ஏய்ப்புப்காரர், தன் ஊழியர்களுக்கு சம்பளத்தை சரியாக கொடுப்பாரா? எதிர்காலத்தில் கிரெட் நிறுவன பங்குகளை விற்று பல கோடி பார்ப்பவருக்கு சம்பளத்தை குறித்து கவலை இல்லை என… பலரும் பலவிதமாக குணால் ஷாவை விளாசினர்.

CRED CEO Kunal Shah Reveals His Salary, Sparks Debate On Internet
Elon Musk பதவி விலகினால் ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த CEO ஒரு தமிழரா?

ஹர்ஷ் ஷர்மா என்கிற ட்விட்டர் பயனர் “ப்ரோ, அதற்குப் பெயர் வரியை மிச்சப்படுத்துவது. அவர் நிச்சயம் மில்லியன் கணக்கில் தன் வாழ்கைத் தரத்துக்காக செலவழித்துக் கொண்டிருப்பார்" என பதிவிட்டிருந்தார்.

இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தன் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுக்கிறாரோ என பஷரத் என்கிற நெட்டிசன் பதிவிட்டிருந்தார்.

எப்படியும் இவர் அடுத்தடுத்த சீரிஸ் சுற்றுகளில் தன் பங்குகளை விற்று பணம் பார்ப்பார் தானே, எனவே சம்பளம் குறித்து கவலைப்பட வேண்டாம். என இஞ்சரபு கோபி சந்து என்பவர் பதிவிட்டிருக்கிறார்.

அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ… ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் கொடுத்து நிறுவனமும் நன்றாக உயர்ந்தால் மகிழ்ச்சி தான்.

CRED CEO Kunal Shah Reveals His Salary, Sparks Debate On Internet
Infosys : ”தவறு செய்துவிட்டேன்”- 40வது ஆண்டு விழாவில் நிறுவனர் நாராயண மூர்த்தி உருக்கம்

யார் இந்த குணால் ஷா?

2000ஆம் ஆண்டு மும்பை நகரத்தில் உள்ள வில்சன் கல்லூரியில் இளங்கலை தத்துவவியல் படித்து பட்டம் பெற்றவர், 2003 - 2004ஆம் ஆண்டில் மேலாண்மைப் படிப்பை நிறைவு செய்யாமல் வெளியேறினார்.

2010 - 2016ஆம் ஆண்டு வரை ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர், முதன்மைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி, ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தை ஸ்னாப்டீல் நிறுவனத்துக்கு சுமார் 450 மில்லியன் டாலருக்கு விற்று வெளியேறினார்.

சிகுயா கேப்பிட்டல் என்கிற உலகப் புகழ்பெற்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டு ஆலோசகராக இருந்தார். ஏஞ்சல் லிஸ்ட், டைம்ஸ் ஊடகக் குழுமத்தில் ஆலோசகராக இருக்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு கிரெட் என்கிற ஃபின் டெக் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கடன் அட்டை வைத்திருக்கும் நபர்கள் குறித்த நேரத்தில் தங்கள் பணத்தை திரும்ப செலுத்த உதவும் தளமாகத் தொடங்கிய நிறுவனம், இன்று பெரிய அளவில் கடன் கொடுக்கும் நிறுவனமாகவும் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

ஃபார்டியூன் குழுமத்தின் 40 அண்டர் 40, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் 40 அண்டர் 40 போன்ற பல வணிகம் சார்ந்த பட்டியல்களில் இடம்பிடிக்கும் அளவுக்கு, இந்திய ஸ்டார்ட் அப் துறையில் முத்திரை பதித்தவர் குணால் ஷா.

CRED CEO Kunal Shah Reveals His Salary, Sparks Debate On Internet
Jeff Bezos : "என் வாழ்நாளுக்குள் பெரும்பாலான சொத்துக்களை தானம் செய்வேன்"- அமேசான் நிறுவனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com