பஞ்சு மிட்டாய் பிரியர்கள் கவனத்திற்கு! புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் கலப்பு - எங்கே?

பஞ்சு மிட்டாயில் அதிக அளவில் நிறம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் அந்த கட்டிடத்திற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
Cotton candies laced with cancer-causing chemical seized in Kollam
Cotton candies laced with cancer-causing chemical seized in Kollam Twitter

கேரளாவில் துணிகளுக்கு நிறம் ஏற்ற பயன்படுத்தப்படும் வேதி பொருளை பஞ்சு மிட்டாய் தயார் செய்வதற்கு பயன்படுத்தியதை உணவு பாதுகாப்புத்துறையினர், கண்டிபிடித்து ஆயிரம் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கொல்லம் மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, அங்கேயே தங்கி பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் விற்பனை செய்யும் பஞ்சு மிட்டாயில் அதிக அளவில் நிறம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் அந்த கட்டிடத்திற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சர்க்கரையுடன் நிறத்திற்காக துணிகளில் நிறம் ஏற்ற பயன்படுத்தப்படும் ரோடமைன் என்ற வேதிப்பொருளைச் சேர்த்து பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.

புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ரசாயனம் இதில் கலந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

Cotton candies laced with cancer-causing chemical seized in Kollam
சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!

இதையடுத்து விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட ஆயிரம் பஞ்சு மிட்டாய் பாக்கெட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

இந்த விவகாரம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Cotton candies laced with cancer-causing chemical seized in Kollam
இந்த உணவுகள் சாப்பிட்டால் புற்றுநோய் வராது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com