கடைசி நேரத்தில் ஓடிப்போன மணமகன்; துரத்தி பிடித்து தாலி கட்டிக்கொண்ட காதலி - எங்கே?

ஒரு மணமகன், தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எடுத்த முடிவு சரிதானா என்ற அச்சத்தில் மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளார். மணமகளோ, அவரை தேடிப்பிடித்து மனதை மாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கடைசி நேரத்தில் ஓடிப்போன மணமகன்; துரத்தி பிடித்து தாலி கட்டிக்கொண்ட காதலி - எங்கே?
கடைசி நேரத்தில் ஓடிப்போன மணமகன்; துரத்தி பிடித்து தாலி கட்டிக்கொண்ட காதலி - எங்கே?twitter

திருமணம் செய்துகொள்ள பயந்து, கடைசி நிமிடத்தில், மண்டபத்தைவிட்டு ஓடிப்போன மணமகனை துரத்தி பிடித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

என்னதான் திருமணம் பற்றிய கனவுகள் நமக்கு ஏராளமாக இருந்தாலும், அந்த நாள் நெருங்க நெருங்க, நாம் எடுத்த முடிவு சரியானதா என்ற பயம் நமக்குள் தோன்ற ஆரம்பிக்கும்.

நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தும், நாம் எடுத்த முடிவு தவறு என்பதை திரும்ப திரும்ப சொல்லிக்காட்டும்.

இந்த பயத்தை ஆங்கிலத்தில், Cold Feet என்று குறிப்பிடுவார்கள். ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே இந்த மனநிலை உருவாகும். இது இயல்பே. அப்படி தோன்றுவதால் சிலர் திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு கூட சென்றுள்ளனர்

கடைசி நேரத்தில் ஓடிப்போன மணமகன்; துரத்தி பிடித்து தாலி கட்டிக்கொண்ட காதலி - எங்கே?
“மணப்பெண்ணின் தங்கையை காதலிக்கிறேன்” திருமணத்தை பாதியில் நிறுத்திய மணமகன் - வினோத சம்பவம்!

இங்கும் ஒரு மணமகன், தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எடுத்த முடிவு சரிதானா என்ற அச்சத்தில் மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளார். மணமகளோ, அவரை தேடிப்பிடித்து மனதை மாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார்

உத்திரபிரதேசத்தின் பரெய்லி என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணமக்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

சுமார் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். திருமணத்திற்கு மணமகன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால், பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்

ஆனால், கல்யாண நாள் நெருங்கி வர மணமகனுக்கு தனது முடிவின் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால் திருமணத்தன்று தான் இதற்கு தயாராக இல்லை எனக் கூறியுள்ளார்.

மண்டபத்தை விட்டு வெளியேறவும் செய்தார்

தன் தாயை கூட்டிவருவதாகச் சொல்லித்தான் அவர் சென்றிருக்கிறார். சந்தேகம் கொண்ட மணமகள் அவரை தேடிச் சென்றார். மணக்கோலத்தில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் தேடியலைந்த பின்னர், ஒரு காவல் நிலையத்தின் அருகே அவரை கண்டுபிடித்துள்ளனர்.

முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மணமகன், பின்னர் மனம் மாறினார். மாப்பிள்ளை வீட்டாரின் சம்மதமும் கிடைத்துள்ளது. பின்னர், அருகில் இருந்த கோவிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர்.

மணமகனின் மனநிலை அறிந்து துரிதமாக செயல்பட்ட மணமகளை இரு குடும்பத்தாரும் பாராட்டினர்.

கடைசி நேரத்தில் ஓடிப்போன மணமகன்; துரத்தி பிடித்து தாலி கட்டிக்கொண்ட காதலி - எங்கே?
திருமணத்தில் மணமகள் மரணம்; தங்கச்சியை உடனடி மணமகள் ஆக்கிய குடும்பம் - கடுப்பான மக்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com