சுவாமி விவேகானந்தரின் மறுபிறவியே பிரதமர் மோடி - வைரலாகும் பாஜக எம்.பியின் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் மறு அவதாரம் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி சௌமித்ரா கான் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது
BJP MP Saumitra Khan says Swami Vivekananda took rebirth as PM Modi
BJP MP Saumitra Khan says Swami Vivekananda took rebirth as PM ModiTwitter

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய கான், "சுவாமிஜி பிரதமர் நரேந்திர மோடியாக புதிய தோற்றத்தில் மறுபிறவி எடுத்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை சுவாமிஜி கடவுளுக்கு சமமானவர்" என்று கூறினார்.

பிரதமர் மோடியை நவீன இந்தியாவின் புதிய யுக சுவாமியாக உணர்கிறேன் என்று கான் மேலும் கூறினார்.

இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

modi
modiTwitter

பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவரது சிறந்த இலட்சியங்களும் சிந்தனைகளும் தனது நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று கூறினார்.

அவரது வாழ்க்கை, தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் ஊக்கமளிக்கும் என்று மோடியின் 160 வது பிறந்தநாளில் ட்வீட் செய்துள்ளார்.

விவேகானந்தரை பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

BJP MP Saumitra Khan says Swami Vivekananda took rebirth as PM Modi
பிரதமர் நரேந்திர மோடி : அட்டகாசமான 34 புகைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com