கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெங்களூரு பெண் : வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

கண்மூடித்தனமான அன்பின் வெளிப்பாடாக காதலர்கள் செய்துகொள்ளும் விஷயங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். அப்படி ஒரு பெண் செய்துள்ள காரியம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெங்களூரு பெண் : வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெங்களூரு பெண் : வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?Twitter

சில காதலர்கள் தங்களது ஆழமான அன்பை வெளிப்படுத்த துணையின் பெயரை பச்சைக்குத்திக்கொள்வதைப் பார்த்திருப்போம். இது துணையுடனான நெருக்கத்தையும் அர்பணிப்பையும் வெளிக்காட்டுவதாக நம்புகின்றனர். 

காதலில் இருக்கும் போது துணைக்காக ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்க வேண்டும் என மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். இது சிலரை சில நேரங்களில் பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்ய வைக்கும். 

கண்மூடித்தனமான அன்பின் வெளிப்பாடாக காதலர்கள் செய்துகொள்ளும் விஷயங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். அப்படி ஒரு பெண் செய்துள்ள காரியம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் மீதான அன்பை வெளிப்படுத்த அவரது பெயரை பச்சையாக குத்திக்கொண்டுள்ளார். அதுவும் அவரது நெற்றியில்.

நெற்றியில் பச்சைக் குத்திக்கொள்ளும் பழக்கம் உலகில் பெரும்பாலான மக்களிடம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண் செய்த செயல் வித்தியாசமானதாக இருந்ததால் இணையத்தில் அவர் பச்சை குத்திக்கொள்ளும் வீடியோ வைரலானது.

வீடியோவில் நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவில் அந்த பெண் சதிஸ் என்ற கணவரில் பெயரை பச்சைக்குத்திக்கொள்கிறார். அந்த பெண் டாட்டூ குறித்து மிகவும் மகிழ்வான எதிர்பார்ப்புடன் இருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெங்களூரு பெண் : வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
ஆஸ்திரேலியா : நாடாளுமன்றத்தில் Propose செய்த MP, ஓகே சொன்ன காதலி - வைரல் வீடியோ

டாட்டு கலைஞர் தனது இயந்திரத்தில் மை நிரப்பி அவர் நெற்றியில் வைப்பதையும் வீடியோவில் பார்க்கலாம். ஆனால் முழுமையாக அவரது பெயரை பச்சைக் குத்தியிருப்பதை வீடியோவில் காட்டவில்லை.

வீடியோவின் குறிப்பில் “இறுதி வடிவம் விரைவில் வருகிறது” என எழுதியுள்ளனர். இதனால் இந்த பெண் உண்மையாகவே டாட்டூ போட்டுக்கொண்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்த  வீடியோவில் இணையவாசி ஒருவர் “எவ்வளவு முட்டாள்தனமானது… காதல் என்பது நாம் எப்படி நடத்துகிறோம், மதிக்கிறோம் மற்றும் உடன் இருக்கிறோம் என்பதைப் பொருத்தது” என கமண்ட் செய்துள்ளார்.

கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெங்களூரு பெண் : வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
The Kerala Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com