”Elon Musk ஆண்களின் கடவுள்” பூஜை செய்து வழிபட்ட ஆண்கள் சங்கம் - இணையத்தில் வீடியோ வைரல்
”Elon Musk ஆண்களின் கடவுள்” பூஜை செய்து வழிபட்ட ஆண்கள் சங்கம் - இணையத்தில் வீடியோ வைரல்Twitter

”Elon Musk ஆண்களின் கடவுள்” பூஜை செய்து வழிபட்ட சங்கம் - இணையத்தில் வீடியோ வைரல்

மஸ்க், இன பாகுபாட்டை திணிப்பவர், ஃபெமினிஸ்ட்களை அழிப்பவர் என்பதாலும், ஆண்கள் தங்கள் மனங்களில் நினைப்பதை சுதந்திரமாக பேச வழிவகை செய்தவர் என்பதாலும் அவரை கடவுளுக்கு நிகராக நினைத்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை கடவுளாக நினைத்து அவருக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வருபவர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மஸ்க் எப்போதும் மக்களின் பேச்சுக்களின் இருந்துக் கொண்டே இருக்கிறார்.

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் பல சர்ச்சைகளுக்கு பிறகு ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கினார்.

Elon Musk
Elon MuskTwitter

ட்விட்டரை கைப்பற்றியப் பிறகு நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார் எலான் மஸ்க். முன்னாள் சி இ ஓவிடம் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை பலரையும் பணியில் இருந்து நீக்கினார். இவரது செயல்களுக்கு உலகளவில் இருந்தும் பல தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

எனினும் இவ்வனைத்தையும் சர்வ சாதாரணமாக நினைத்து ஜாலியாக தன் வேலையை பார்த்துவருகிறார் மஸ்க். இவருக்கான மவுசு குறையவே இல்லை.

இந்நிலையில், சிலர் எலான் மஸ்க்கிற்கு பூஜைகள் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

”Elon Musk ஆண்களின் கடவுள்” பூஜை செய்து வழிபட்ட ஆண்கள் சங்கம் - இணையத்தில் வீடியோ வைரல்
Elon Musk : வளர்ப்பு நாயை ட்விட்டர் CEO ஆக்கிய மஸ்க் - பராக் அகர்வால் அவமதிக்கப்பட்டாரா?

பெங்களூருவின் சேவ் இந்தியா பேமிலி பவுண்டேஷனை (SIFF) சேர்ந்தவர்கள், மஸ்க்கின் புகைப்படத்தை வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த SIFF, ஆண்களுக்காக நடத்தப்படும் ஒரு தனியார் அமைப்பாகும்.

ஊதுபத்திகள் ஏற்றி, மந்திரங்கள் சொல்லி எலான் மஸ்க்கு பூஜை செய்யும் இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

மஸ்க், இன பாகுபாட்டை திணிப்பவர், ஃபெமினிஸ்ட்களை அழிப்பவர் என்பதாலும், ஆண்கள் தங்கள் மனங்களில் நினைப்பதை சுதந்திரமாக பேச வழிவகை செய்தவர் என்பதாலும் அவரை கடவுளுக்கு நிகராக நினைத்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்

”Elon Musk ஆண்களின் கடவுள்” பூஜை செய்து வழிபட்ட ஆண்கள் சங்கம் - இணையத்தில் வீடியோ வைரல்
Elon Musk ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலகல்? மௌனத்தை உடைத்த மஸ்க் - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com