73 கிலோமீட்டர், 13 மணி நேரம்: பெங்களூரு நகருக்குள் இந்தியாவை நடந்தே கடந்த மனிதர் - எப்படி?

ஆகஸ்ட் 15 காலை 7.45 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் ராஜாஜி நகர் ஓரியன் மாலில் இவர் பயணத்தை தொடங்கினார். சுமார் 73 கிலோமீட்டர் தூரம், 13 மணி நேரம் 25 நிமிடங்கள் நடந்து, தொடங்கிய இடத்தை வந்தடைந்தார். இவரது பயணம் முடிவடையும்போது மணி அதிகாலை 1.40.
73 கிலோமீட்டர், 13 மணி நேரம்: பெங்களூரு நகருக்குள் இந்தியாவை நடந்தே கடந்த மனிதர் - எப்படி?
73 கிலோமீட்டர், 13 மணி நேரம்: பெங்களூரு நகருக்குள் இந்தியாவை நடந்தே கடந்த மனிதர் - எப்படி?twitter

13 மணி நேரம், 73 கிலோமீட்டர் நடந்து இந்திய வரைபடத்தை உருவாக்கியுள்ளார் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. வழக்கமாக இதுபோன்ற முக்கிய நாட்களில் ஒவ்வொருவரும் தனித்துவமாக அந்த நாளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு கதை தான் இதுவும்!

பெங்களூருவை சேர்ந்தவர் விகாஸ் ருபாரெயிலா. இவர் ஒரு மாரத்தான் வீரர். 51 வயதாகும் இவர் பெங்களூருவைச் சுற்றி சைக்கிளிங் செய்து ஜிபிஎஸ் ஆர்ட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, சற்றே வித்தியாசமாக ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்த இவர், நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

இந்திய வரைபடத்தின் அவுட்லைனை தனது நடைப்பயணம் மூலம் ஜிபிஎஸ் கலைவடிவத்தை உருவாக்க திட்டமிட்டார்.

பெங்களூருவுக்குள்ளேயே நடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்

அதன்படி, ஆகஸ்ட் 15 காலை 7.45 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் ராஜாஜி நகர் ஓரியன் மாலில் லோகேஷனை வைத்து இவர் பயணத்தை தொடங்கினார். சுமார் 73 கிலோமீட்டர் தூரம், 13 மணி நேரம் 25 நிமிடங்கள் நகருக்குள்ளேயே நடந்து, தொடங்கிய இடத்திற்கே வந்தடைந்தார். இவரது பயணம் முடிவடையும்போது மணி அதிகாலை 1.40.

தனது X தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து, சுதந்திர தின வாழ்த்துகளை கூறியிருந்தார் ருபாரெயிலா.

"அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இதனை ஒரு நாளில் செய்து முடிக்க இயலும் என்று நானே நம்பவில்லை. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி"

73 கிலோமீட்டர், 13 மணி நேரம்: பெங்களூரு நகருக்குள் இந்தியாவை நடந்தே கடந்த மனிதர் - எப்படி?
ரஜினியை சந்திக்க 55 நாட்கள் நடந்தே இமயமலைக்கு சென்ற ரசிகர்- சூப்பர் ஸ்டார் செய்தது என்ன?

தனது இந்த பயணத்திற்காக ருபாரெயிலா ஸ்டார்வா என்ற செயலியை பயன்படுத்தியுள்ளார். ஜிபிஎஸ்-ன் உதவியுடன் ஒருவரது நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் ஒரு செயலியாகும் இது.

கடும் மழை, மொபைலில் சார்ஜ் குறைந்தது, பவர் பேங்கிலும் சார்ஜ் முடிந்தது என அவரது பயணத்திற்கு தடங்கல்களுக்கு குறை எதுவும் இல்லை.

எனினும் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் ருபாரெயிலா. அவருக்கு இணையவாசிகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

73 கிலோமீட்டர், 13 மணி நேரம்: பெங்களூரு நகருக்குள் இந்தியாவை நடந்தே கடந்த மனிதர் - எப்படி?
இந்தியாவை தன்னந்தனியாக சுற்றிப்பார்த்த நபர்- 18 மாதங்கள், 63,000 கிமீ கடந்து சாதனை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com