பிரக்ஞானந்தா பெற்றோருக்கு EV கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா - விலை என்ன தெரியுமா?

செஸ் உலகக்கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதை அடுத்து, பிரக்ஞானந்தாவை பாராட்டினார் ஆனந்த் மஹிந்திரா. மேலும் அவரது பெற்றோரை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு மஹிந்திரா XUV400 எலக்டிரிக் காரினை பரிசளிப்பதாக கூறியுள்ளார் தொழிலதிபர்.
பிரக்ஞானந்தா பெற்றோருக்கு EV கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா - விலை என்ன தெரியுமா?
பிரக்ஞானந்தா பெற்றோருக்கு EV கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா - விலை என்ன தெரியுமா?ட்விட்டர்

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு தனது நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரும், பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா திறமையாளர்களை அடையாளம் காண்பதில் தவறியதில்லை.

சமீபத்தில் செஸ் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் நடந்து முடிந்தது. இதில் இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. மூன்று நாட்கள் நடந்தது இறுதிப்போட்டி. முதல் நாள் டிராவில் முடிந்தது போட்டி. இதனால் இரண்டாம் நாளுக்கு சென்றது. இரண்டாவது நாளிலும் டிரா ஆக, மூன்றாவது நாளில் மோதினர் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா.

இந்த போட்டியில் மேக்னஸ் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்ததை அடுத்து பல்வேறு தரப்பினரும், அந்த 18 வயது இளைஞனை பாராட்டினர்.

அதை விட முக்கியமாக அனைவரது கவனத்தை, பாராட்டுகளை பெற்றது பிரக்ஞானந்தாவின் தாயார் நாகலக்ஷ்மி தான். சிறு வயது முதல் பிரக்ஞானந்தா பங்கேற்ற அனைத்து செஸ் போட்டிகளிலும் உடன் சென்றவர்.

குறிப்பாக இந்த உலகக்கோப்பையின் போது பிரக்ஞானந்தாவை விட அதிக புகைப்படங்கள் இவருடையதாக தான் இருந்தது.

பிரக்ஞானந்தா பெற்றோருக்கு EV கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா - விலை என்ன தெரியுமா?
சந்திரயான் 3: விமர்சித்த பிபிசி செய்தியாளர்- ஆனந்த் மஹிந்திரா பதில்! வைரலாகும் பழைய வீடியோ

இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பிரக்ஞானந்தாவை பாராட்டியிருந்தர், அதற்கு ஒரு ட்விட்டர் பயனர், பிரக்ஞானந்தாவுக்கு அவரது மஹிந்திரா நிறுவனத்தின் Thar காரினை பரிசளிக்கலாமே, அவர் தகுதியானவர் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, “என்னிடம் அதை விட சிறந்த யோசனை ஒன்று இருக்கிறது. பிரக்ஞானந்தாவை ஊக்குவித்து அவருக்கு துணை நின்றதற்காக அவரது பெற்றோர் நாகலக்ஷ்மி மற்றும் ரமேஷ்பாபுவுக்கு XUV400 எலக்டிரிக் காரினை பரிசளிக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், இவர்களை போலவே மற்ற பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டினை அறிமுகப்படுத்த வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

இந்த காரின் விலை ரூ.15 லட்சம் முதல் 19 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது

பிரக்ஞானந்தா பெற்றோருக்கு EV கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா - விலை என்ன தெரியுமா?
Anand Mahindra: அம்பானி, சுனிதா வில்லியம்ஸுடன் Selfie எடுத்த தொழிலதிபர் - வைரல் புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com