மத்திய பிரதேசம்: 24 மணிநேரம் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மரம் - ஒரு சுவாரஸ்ய பின்னணி!
மத்திய பிரதேசம்: 24 மணிநேரம் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மரம் - ஒரு சுவாரஸ்ய பின்னணி!twitter

மத்திய பிரதேசம்: 24 மணிநேரம் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மரம் - ஒரு சுவாரஸ்ய பின்னணி!

கிமு 250ஆம் ஆண்டில் பேரரசர் அசோகர் இந்த மரத்தை பார்வையிட்டார். அங்கு ஒரு கோவிலையும் அவர் எழுப்பினார் என்கிறது வரலாறு. அங்கிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கிளையை அரசர் அசோகர் தனது நாட்டின் தலைநகரான அனுராதபுரத்தில் நட்டுவைத்தார்.

மத்திய பிரதேசத்தின் சாஞ்சி ஸ்தூபியில் நடப்பட்டுள்ள மரம் ஒன்றுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மரத்திற்கு எதற்கு இரவு பகலாக காவல் துறை பாதுகாப்பு?

மரங்கள் இயற்கையின் வரம். பல விதமான பறவை இனங்களுக்கு கூடாக இருக்கிறது. மனிதர்களுக்கு உணவு, சுவாசிக்க சுத்தமான காற்று, மழை, நிழல் என எல்லாம் வழங்குகிறது. மரங்களை பாதுகாத்தல் என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை, நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் ஒரு பொக்கிஷம்.

அப்படி மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மரத்தை இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர். சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும்.

இங்கு தான் இந்த மரம் இருக்கிறது. இந்த மரத்தினை போதி மரம் என்று அழைக்கின்றனர். சுமார் 2500 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது இதன் வரலாறு

தனது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட கஷ்டங்களை, சவால்களை ஒரு நாள் நேரில் பார்த்த கௌதம சித்தார்த்தா எனும் இளவரசர், வசதியான அரண்மனை வாழ்வை துறந்தான். வாழ்க்கையின் அர்த்ததை தேடி அலைந்த இளவரசர், ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தபோது ஞானத்தை பெற்றார். ஞானத்தை பெற்ற அந்த இளவரசர் தான் இன்று பலரால் வழிபடப்படும் புத்தர்.

புத்தருக்கு ஞானம் அதாவது போதனை அளித்த இம்மரத்தை போதி மரம் என்று அழைக்கின்றோம்

மத்திய பிரதேசம்: 24 மணிநேரம் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மரம் - ஒரு சுவாரஸ்ய பின்னணி!
அமெரிக்கா டூ தாய்லாந்து : 500 ஆண்டு பழமையான புத்தர் தங்க கீரிடம் - தாயகம் திரும்பிய கதை

கிமு 250ஆம் ஆண்டில் பேரரசர் அசோகர் இந்த மரத்தை பார்வையிட்டார். அங்கு ஒரு கோவிலையும் அவர் எழுப்பினார் என்கிறது வரலாறு.

அங்கிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கிளையை அரசர் அசோகர் தனது நாட்டின் தலைநகரான அனுராதபுரத்தில் நட்டுவைத்தார்.

பின்னர் இலங்கை மன்னரான தேவநம்பிய திஸ்ஸாவுக்கு போதி மரத்தின் ஒரு கிளையை பரிசாக வழங்கியுள்ளார் அசோகர்.

கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கையின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச இந்த மரத்தின் ஒரு கிளையை எடுத்துவந்து அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில், சலாமத்பூரில் நட்டுவைத்தார் என்கிறது இந்தியா டுடே தளம்.

இந்த மரத்திற்கு தான், இவ்வளவு தீவிரமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை பராமரிக்க சுமார் 64 லட்சம் ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்தியா டுடே தளத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மரத்திற்கு தேவையான தண்னீர், மற்றும் அதற்கு வழங்கப்படும் காவல்துறை பாதுகாப்பு அனைத்தும் இந்த செலவுகளுக்குள் அடக்கம்.

தற்போது இந்த மரத்தின் இலைகள் வாடி, பூச்சிகள் தாக்கியுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்க தோட்டக்கலை துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் பாதுகாப்பு படையினர்.

மத்திய பிரதேசம்: 24 மணிநேரம் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மரம் - ஒரு சுவாரஸ்ய பின்னணி!
பிசோனியா: பறவைகளைக் கொல்லும் அதிசய மரம் - திகிலூட்டும் காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com