தனது மகளையே திருமணம் செய்த 62 வயது முதியவர்: வைரலாகும் வீடியோ - உண்மை என்ன? | Fact Check

மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்ததுபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் உள்ளது. இப்படி திருமணம் தொடர்பான வீடியோக்கள் இந்தப்பக்கத்தில் அதிகம் இருந்துள்ளது.
62-year-old man who married his own daughter is going viral
62-year-old man who married his own daughter is going viralTwitter

இந்து கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது சொந்த மகளையே 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்ததாக இணைத்தில் வைரலான வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இளம் பெண்ணும் முதியவரும் மாலையுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டது. முதலில் டிரோல் என்ற ட்விட்டர் கணக்கில் கடந்த டிசம்பவர் 25ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

அதில் இந்துக் கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ பகிரப்பட்டிருந்தது.

மேலும் Techparesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ம் தேதி இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் Paresh Sathaliya என்ற யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.

அதுமட்டுமல்லாது Techparesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வதுபோல், மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்ததுபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் உள்ளது. இப்படி திருமணம் தொடர்பான வீடியோக்கள் இந்தப்பக்கத்தில் அதிகம் இருந்துள்ளது.

62-year-old man who married his own daughter is going viral
4 அழகிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த அரபி : இணையத்தில் வைரல் - உண்மை என்ன?

இவை வைரல் செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என கண்டறியப்படுள்ளது.

இந்நிலையில் தனது மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று இருக்கும் வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் தனது மகளையே முதியவர் திருமணம் செய்வதாக வைரலாகும் வீடியோ போலியானது, இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

62-year-old man who married his own daughter is going viral
" Two Two Two" : இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நபர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com