
மலைப்பயணத்திற்கு திட்டமிடுகிறீர்களா? ஆனால் இந்த நேர தொலைவை பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.
விமான நிலையங்கள் பக்கத்திலேயே இருக்கும் இந்தியாவின் மலைவாசஸ்தலங்கள் பற்றி தான் பார்க்க போகிறோம்.
அழகான பயண இலக்கை நீங்கள் தேடுகிறீர்களானால், காஷ்மீர் ஒரு சிறந்த இடமாகும்.
குல்மார்க் என்ற சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட மலை கிராமம் உங்கள் விடுமுறைக்கு ஏற்ற இடமாகும்.
ஸ்ரீநகரில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தை டாக்சிகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் விமானம் மூலமாகவும் எளிதாக அடையலாம். நேரத்தை மிச்சப்படுத்த, நீங்கள் ஸ்ரீநகர் வரை விமான பயணம் மேற்கொண்டு அங்கிருந்து அந்த இடத்தை அடையலாம்.
மலைகளின் ராணி என்றும் அழைக்கப்படும் முசோரி கடல் மட்டத்திலிருந்து 6580 அடி உயரத்தில் உள்ளது.
மேலும் இது டெல்லிக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், இதன் பிரபலத்தை புறக்கணிக்க முடியாது.
முசோரிக்கு அருகே ஜாலி கிராண்ட் விமான நிலையம் உள்ளது.
இது மலை வாசஸ்தலத்திலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது. எனவே, விரைவான பயணத்திற்கு உங்களிடம் அதிக நேரம் இல்லையென்றால், விமானத்தில் பயணித்து நேரத்தைச் சேமிக்கவும்.
கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் ஷில்லாங், இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.
அற்புதமான நீர்வீழ்ச்சிகள், இதமான வானிலை, இயற்கை அழகு மற்றும் அழகான கட்டிடக்கலை ஆகியவற்றைக் கொண்ட ஷில்லாங், ஆண்டின் எந்த நேரத்திலும் ஒரு சிறந்த பயணத்தை வழங்குகிறது.
உம்ரோய் விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் ஷில்லாங் விமான நிலையம் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
தேயிலை சுற்றுலா, காஞ்சன்ஜங்காவின் கண்கவர் காட்சிகள், டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் என டார்ஜிலிங்கில் பார்க்க பல இடங்கள் உள்ளன.
டார்ஜிலிங்கில் இருந்து 67 கிமீ தொலைவில் பக்தோக்ரா விமான நிலையம் உள்ளது. இதன் மூலம் நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
22 கிமீ தொலையில் சிம்லா விமான நிலையம் உள்ளது. சுற்றி பார்க்க தாராளமாக நேரம் கிடைக்கும்
டெல்லியிலிருந்து நேரடி விமானங்கள் இருக்கின்றன. மலைப்பிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் சிம்லா மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.
உங்களுக்கு அதிக நேரம் இல்லை என்றால், சாலைகளில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக விமானத்தில் செல்லுங்கள். அதன் இயற்கை அழகால் நீங்கள் கவரப்படுவீர்கள்.
பியாஸ் நதிக்கரையில் விரிந்து கிடக்கும் இந்த இரட்டை நகரங்கள் இயற்கை எழில் கொஞ்சும் நீரோடைகள், பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள், பழத்தோட்டங்கள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நேரத்தை வீணடிக்காமல் நிறைய இடங்களை சுற்றி பார்க்க விமான பயணத்தை தேர்வு செய்யலாம்.
பூந்தர் விமான நிலையத்திலிருந்து குலுவை அடைய 20 நிமிடம் ஆகும் மணாலியை அடைய 1 மணி நேரம் 36 நிமிடம் ஆகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust