கோடை காலத்தில் செல்லப் பிராணிகளை பராமரிப்பது எப்படி? எளிய வழிகள் இதோ!

செல்லப்பிராணி தனது உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி அதிகமாக நாவினால் தடவினால் அல்லது சொறிந்தால், அவைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
Tips for pet care during the summer season
Tips for pet care during the summer seasoncanva

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மனிதர்களைப் போலவே, செல்லப் பிராணிகளுக்கும் பராமரிப்பு நடைமுறை தேவைப்படுகிறது.

வெப்பநிலை உயரும்போது, ​​​​உங்கள் செல்லப்பிராணியைப் பாதுகாக்க நீங்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் உள்ளன.

கோடை காலத்தில் உங்கள் செல்லப்பிராணியை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில குறிப்புகள் இங்கே.

செல்லப்பிராணியை ஒருபோதும் காரில் விடாதீர்கள்

உங்கள் செல்லப்பிராணியை மூடிய காரில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். சாதாரண நாட்களை விட கோடை காலத்தில் வெப்பநிலையை அதிகமாக இருக்கும், இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும்.

ஒட்டுணிகளை கட்டுப்படுத்துதல்

பொதுவாக நாய்களுக்கு ஒட்டுண்ணி தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, உங்கள் செல்லப்பிராணியை ஒட்டுண்ணிகளிலிருந்து பாதுகாக்க நாட்டு மருந்து கடைகளில் வேப்ப எண்ணெய் வாங்கி அவைகளின் ரோமங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டலாம்.

உங்கள் செல்லப்பிராணிகள் உண்ணி, பேன் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடிக்கடி குளிப்பாட்டிவிடுதல்

பொதுவாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு முடி அதிகமாக வளரும். இதனால் அவைகளுக்கு அரிப்பு ஏற்பட்டு எளிதாக தொற்று ஏற்படலாம்.

செல்லப்பிராணியை 4 முதல் 6 வாரங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரின் அறிவுறுத்தலின்படி குளிப்பாட்டுதல் நல்லது.

செல்லப்பிராணிகளின் ரோமங்கள் உதிர்வை தடுக்க, லிண்ட் ரோலர் ( Lint Roller ) பயன்படுத்தி, தேவையற்ற ரோமங்களை நீக்கலாம்.

குடிநீர்

கோடைகாலத்தில் மனிதர்களை போல செல்லபிராணிக்கு தாகம் ஏற்படுகிறது. அவைகளுக்கு நீர் சத்துள்ள உணவுகளை அளிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும், தண்ணீர் வைக்கும் பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும். தூசி போன்று எதேனும் இருந்தால் அவைகளுக்கு தொற்று ஏற்படலாம்.

Tips for pet care during the summer season
நாய் வளர்ப்பு : நாம் அறிய வேண்டிய சில விஷயங்கள்

ஒவ்வாமையில் இருந்து பாதுகாத்தல்

செல்லப்பிராணி தனது உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி அதிகமாக நாவினால் தடவினால் அல்லது சொறிந்தால், அவைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

மேற்கண்ட வழிமுறைகளை கையாள்வதன் மூலமே ஒவ்வாமை போன்ற நோய்கள் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படாமல் தடுக்கலாம்.

Tips for pet care during the summer season
பூனை வளர்ப்பவரா நீங்கள்? : பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com