தென் இந்தியர்கள் ஆரோக்கியத்தின் ஆதாரம் 'கஞ்சி' - வியக்க வைக்கும் தகவல்கள்

ஊறுகாய் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கஞ்சி எல்லாவற்றோடும் இணைந்து சுவை தரக் கூடியதாக இருக்கிறது. அதே போல, உடல் சூட்டைத் தனிக்கும் உணவாகவும் இது இருக்கிறது. மேலும், சிறந்த புரோபயாடிக் உணவாகவும், சிறந்த நியூட்ரிசியனாகவும் இது விளங்குகிறது.
அரிசி கஞ்சி
அரிசி கஞ்சிTwitter

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நம் எல்லோர் வீட்டிலும் ஒரு பழக்கம் இருந்தது. அன்று இரவு தூங்கப் போகும் முன்பு, எஞ்சியிருக்கும் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி வைப்பது தான் அது. இன்றும் கூட பலரது வீடுகளில் இந்த பழக்கம் இருப்பதை நாம் காணலாம். விடிந்ததும், அந்த சோற்றில் மோர் ஊற்றி, உப்பு போட்டு, ஏதேனும் ஒரு ஊறுகாய் துணையோடு சாப்பிடுவது நம் குடும்பங்களில் எதார்த்தமான வழக்கமாக இருக்கிறது.

ஊறுகாய் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கஞ்சி எல்லாவற்றோடும் இணைந்து சுவை தரக் கூடியதாக இருக்கிறது. இப்படியான ஒரு தன்மை வேறெந்த உணவு வகைக்கும் கிடையாது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். அதே போல, உடல் சூட்டைத் தனிக்கும் உணவாகவும் இது இருக்கிறது. மேலும், சிறந்த புரோபயாடிக் உணவாகவும், சிறந்த நியூட்ரிசியனாகவும் இது விளங்குகிறது.

இந்த எளிமையான உணவிற்கு, தென்னிந்தியாவில் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.

காலனியாதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவில், காபி உயர் வர்க்க மக்களின் பானமாகக் கருதப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் நீராகரம் என்று அழைக்கப்படும் பழைய சோற்றுத் தண்ணீரை உட்கொண்டனர். வரலாற்றாசிரியர் ஏ ஆர் வெங்கடாசலபதி, தனது "In Those Days, There Was No Coffee" என்ற புத்தகத்தில், இந்த உணவைக் காபி ஓரங்கட்டியதாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்,

தமிழ்நாட்டின் முக்கியமான தொழிலாக விவசாயம் இருப்பதால், நீராகாரம் என்பது வேலை தொடங்கும் முன்னர் எல்லோராலும் பருகப்பட்ட ஒரு பானமாக இருப்பதாக, அந்த நூலில் ஏ.ஆர்.வெங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்றும், இந்தியா முழுமைக்கும் இந்த புளித்த அரிசிச் சோற்றுத் தண்ணீர் வெவ்வேறு வகைகளில் உட்கொள்ளப்படுகிறது. வங்காளத்தில் பான்டா பட், அசாமில் போயிட்டா பட், ஒரிசாவில் பகாலா, கேரளாவில் பழங்கஞ்சி என்று பல்வேறு பெயர்களில் அவை அறியப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகைகளில் இது உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சிலருக்கு வெறும் உப்பும், சிலருக்கு வெங்காயம், சட்னிகள், ஊறுகாய், மீன், காய்கறிகள் போன்ற துணை உணவுகளும் உண்டு.

அரிசி கஞ்சி
கல்லீரல் : ஆரோக்கியமாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?


ஒடிசாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று, பகாலா திபாஸின் போது இந்த உணவு கொண்டாடப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்த பான்டா பாட் ஆஸ்திரேலியாவில் மாஸ்டர்செஃப் ஃபைனலில், கிஷ்வர் சௌத்ரி என்பவர் ‘smoked rice water’ என்ற பெயரில் நீராகாரம் போன்ற திரவ உணவை வழங்கினார். அதற்கு இணை உணவாக எரிந்த மிளகாய், மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த மத்தி மீன் மற்றும் வெங்காய சல்சா ஆகியவற்றைப் பரிமாறினார்.


ஜூலை 2021 இல், புவனேஸ்வரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) நடத்திய ஒரு ஆய்வில், புளித்த அரிசி நீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களின் (SCFA) நல்ல ஆதாரமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அரிசி கஞ்சி
கவனிக்க மறந்த 13 உணவுகள் : தினசரி உணவாக எப்படி மாற்றுவது? | Nalam 360

இன்ஸ்டிடியூட் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆஃப் க்ளினிக்கல் மைக்ரோபயோம் ரிசர்ச் துறைத் தலைவரும், பேராசிரியருமான பாலமுருகன் ராமதாஸ் இதுகுறித்து கூறுகையில், "2002 முதல் குடல் நுண்ணுயிரியை ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாக, எய்ம்ஸில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இது அவர்களுக்குச் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (SCFA) போன்றவை நீராகாரத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இது உள்நாட்டில் தொரணி என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு பிராந்தியங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருட்களைத் தேடிக்கொண்டிருந்ததால், பகலா அல்லது நீராகாரத்தின் நன்மைகளைப் பற்றி நாங்கள் 2019 இல் எங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினோம்” என்றார்.

அரிசி கஞ்சி
இந்த மழை, வானிலை உங்களைச் சோர்வாக்குகிறதா? - இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

தொரணியில் காணப்படும் SCFA, புளித்த அரிசியில் உள்ள நீர், ஆற்றலை அளிக்கிறது. மேலும், வைரஸ் எதிர்ப்பு பெப்டைடுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே போல, 2011 ஆம் ஆண்டு அஸ்ஸாம் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி எடுத்துக்காட்டப்பட்டது.

அரிசி கஞ்சி
குழந்தைகளின் லைஃப்ஸ்டைல் நோய்கள் முதல் தாய்மார்களின் புற்றுநோய் வரை தடுக்கும் ஒரு மருந்து!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com