எப்போதுமே Tired ஆக இருக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணம் - என்னென்ன தெரியுமா?

தூக்கமின்மை, குறைந்த அளவு உடல் செயல்பாடு அல்லது முறையற்ற உணவு ஆகியவை உங்களை சோர்வடையச் செய்யும். எப்போதும் நம் உடலை சோர்வடையச் செய்யும் காரணங்கள் குறித்து இங்கே காணலாம்.
 5 Reasons Why Your Body is Tired All The Time
5 Reasons Why Your Body is Tired All The TimeTwitter

நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? காலை முதல் இரவு வரை, ஒரு நாள் முழுவதும் Dull ஆக இருக்கிறதா உங்களுக்கு? அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.

தூக்கமின்மை, குறைந்த அளவு உடல் செயல்பாடு அல்லது முறையற்ற உணவு ஆகியவை உங்களை சோர்வடையச் செய்யும். எப்போதும் நம் உடலை சோர்வடையச் செய்யும் காரணங்கள் குறித்து இங்கே காணலாம்.

நீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பதற்கான 5 காரணங்கள்

நீரிழப்பு

போதுமான அளவு தண்ணீர், உடலின் பாதி பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. தோல் ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை பல ஆரோக்கிய நன்மைகளை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கிறது.

நீங்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும்போது அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. இது குறைந்த அளவிலான ஆற்றலையே கொடுக்கிறது.

 5 Reasons Why Your Body is Tired All The Time
தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? சரி செய்ய மருத்துவர்கள் கூறும் உணவுகள் என்னென்ன?
Food
Food Twitter

ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்தாதது

நீங்கள் எடுத்து கொள்ளும் உணவு, மற்றும் அதன் விகிதம் உங்கள் உடலின் ஆற்றலை முடிவு செய்கிறது.

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுவதால் உடல் சோர்வடையலாம்.

 5 Reasons Why Your Body is Tired All The Time
summer start : கோடை காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 உணவுகள்

ஊட்டச்சத்து குறைபாடுகள்

ஊட்டச்சத்து குறைபாடுகள் உங்களை சோர்வடையச் செய்யலாம். வைட்டமின் டி, வைட்டமின் பி-12, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை குறைந்த அளவில் இருக்கும் பட்சத்தில் உடல் சோர்வடையலாம்.

இந்த குறைபாடுகள் மிகவும் பொதுவானவை என்பதால், நீங்கள் விவரிக்க முடியாத சோர்வை அனுபவித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

நிம்மதியான தூக்கம்

போதுமான தூக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம். நம்மில் பலர் போதுமான அளவு தூங்குவதில்லை. இது சோர்வுக்கு வழிவகுக்கும்.

தூக்கத்தின் போது, உங்கள் உடல் முக்கியமான வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுவது மற்றும் செல்களை சரிசெய்தல் உட்பட பல முக்கியமான செயல்முறைகளை செய்கிறது. இதன் மூலம் அடுத்த நாள் உங்களை உற்சாகமாக உணர வைக்கிறது.

Stress
StressRepresentational

அதிக மன அழுத்தம்

மன அழுத்தத்தில் இருக்கும் போது, நீங்கள் அடிப்படியாகவே சோர்வாக உணர்வீர்கள். மன அழுதத்தால் சரியாக தூங்க முடியாது, எதையாவது யோசித்துக்கொண்டே இருப்போம், சரியாக உணவு உட்கொள்ளமாட்டோம்.

தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தால் அது உங்கள் உடலின் வளங்களை பாதிக்கும். இதனால் நீங்கள் சோர்வாக உணர்கிறீர்கள்.

 5 Reasons Why Your Body is Tired All The Time
மன அழுத்ததால் பாதிப்படையும் குடல் ஆரோக்கியம் - ஆராய்ச்சிகள் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com