ஒற்றைத் தலைவலி: 12 வகை மைக்ரேன்கள் என்னென்ன தெரியுமா? | Nalam 360

ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் சாதாரனமான ஒன்றாகிவிட்ட இக்காலக்கட்டத்தில், அதில் 12 வகைகள் இருப்பதாக கூறுகின்றனர். ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன்பு, மனநிலை மாற்றம், பசியின்மை மற்றும் உடல் ஆற்றல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலிPexels

தலைவலிக்குக் காரணம் கண்டுபிடிப்பதே பெரிய தலைவலிதான். அவ்வளவு காரணங்களால் தலை வலிக்கும். தலைவலி என்பது அறிகுறி. நோய் அல்ல. உடலில் சேர்ந்துள்ள கழிவை உணர்த்தும் அறிகுறிதான், தலைவலி.

அனைவருக்கும் தெரிந்த பொதுவான 3 தலைவலி வகைகளைத் தவிர, இன்னும் பல வகைகள் உள்ளன.

ஒற்றைத் தலைவலி வருபவர்களுக்குத் தெரியும். அது எவ்வளவு கொடுமையான வலி என்று. இந்த வலியில் பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாகத் தலையின் ஒரு பக்கத்தில் உணரப்படும் கடுமையான, துடிக்கும் நிலையில் உள்ளாக்கும் தலைவலி. சிலர் வலியால் புரண்டு புரண்டு படுப்பார்கள்.

ஒற்றைத் தலைவலி வருவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, மனநிலையில் மாற்றம், பசியின்மை மற்றும் உடல் ஆற்றல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம். நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் பெரும்பாலும் உங்களுக்கு வருகின்ற ஒற்றைத் தலைவலியின் வகையைப் பொறுத்தது.

ஒற்றைத் தலைவலி
Women Health : 40 வயதில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் | Nalam 360

மூன்று பொதுவான ஒற்றைத் தலைவலி வகைகளுடன் இந்தப் பதிவை ஆரம்பிக்கலாம்.

1: ஆரா இல்லாத ஒற்றைத் தலைவலி

ஆரா இல்லாத ஒற்றைத் தலைவலி என்பது ஒற்றைத் தலைவலியின் மிகவும் பொதுவான வகை. பெரும்பாலானவர்களுக்கு இது வரலாம்.

பொதுவாக உங்கள் தலையின் ஒரு பக்கம், நான்கு மணிநேரம் முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும். சிலருக்கு இது தீவிரமான, துடிக்கும் தலைவலியாக உணரப்படுகிறது.

2: ஆராவுடன் ஒற்றைத் தலைவலி

ஆரா என்பது மங்கலான பார்வை, மந்தமான பேச்சு மற்றும் தலைசுற்றல் போன்ற நரம்பியல் கோளாறுகள் தொடர்பானது.

ஆராவுடன் கூடிய ஒற்றைத் தலைவலி என்பது தலைவலி வருவதற்கு முன்பு நீங்கள் மேற்சொன்ன அறிகுறிகளை அனுபவிக்கலாம். ஆரா பலவிதமான நரம்பியல் அறிகுறிகளைக் கொண்டது. தலைவலி 5 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவரவர் உடல்நிலையைப் பொறுத்தது.

ஒற்றைத் தலைவலி
மூலம் : ஆரம்ப கட்டத்தில் வீட்டிலிருந்தே குணப்படுத்தும் சில வழிமுறைகள் | Nalam 360

3: தலைவலி இல்லாத ஒற்றைத் தலைவலி

தலைவலி இல்லாத ஒற்றைத் தலைவலி. சில சமயங்களில் எச்சரிக்கை அறிகுறிகளைக் கொடுக்கும். ஆனால் வலி வராது. நரம்பியல் தொந்தரவுகள் இருக்கலாம். ஆனால் தலைவலி இல்லாமல் இருக்கும். உங்களுக்கு வலி வந்திருக்காது.

குறைவான சிலருக்கு வருகின்ற ஒற்றைத் தலைவலியின் வகைகள்:

4. கிரானிக் வகை

நாள்பட்ட ஒற்றைத் தலைவலி என்பது ஒரு மாதத்தில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கும் மேல் நீங்கள் அனுபவிக்கும் ஒற்றைத் தலைவலி.

5. கண்ணில் வருகின்ற வலி

விழித்திரை ஒற்றைத் தலைவலி அல்லது கண் ஒற்றைத் தலைவலி என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் ஒற்றைத் தலைவலியின் ஒரு வகை. ஒரு கண் மட்டும் வலிக்கும். அந்தக் கண்ணைத் திறக்காமல் மூடி இருந்தால் போதும் என்பது போல உணர்வு இருக்கும்.

6. அடிவயிற்று ஒற்றைத் தலைவலி

இதுவும் ஒருவகை ஒற்றைத் தலைவலியாகும். இங்கு வலியை தலைவலியாகக் காட்டிலும் அடிவயிற்றில் உணர நேரிடும். வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியும் சேர்ந்து ஏற்படலாம். இந்த வகை ஒற்றைத் தலைவலி குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது. வயிற்றில் அதிகக் கழிவு சேர்ந்திருப்பதன் அறிகுறி தலைவலியாக உடல் உணர்த்துகிறது.

ஒற்றைத் தலைவலி
உயிர்கொல்லி நோய்கள்கூட வராமல் தடுக்கும் பூண்டு | Garlic Facts | Nalam 360

7. மாதவிடாய் ஒற்றைத் தலைவலி

ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடையது இந்த வகை. மாதவிடாய் வரும் முன்னர், சில பெண்களுக்குத் தலைவலி வரும். PMS என்று சொல்வார்கள். எரிச்சலான மனநிலையும் இருக்கும். மேலும் பொதுவாக இருபுறமும் ஓரிரு நாட்கள் வரை வலி ஏற்படும்.

8. பிரெயின் ஸ்டெம் ஆரா

மூளைத் தண்டில் வருகின்ற ஒற்றைத் தலைவலி. தடுமாற்றம் அடைவது, இரட்டை பார்வை, பேசுவதில் சிரமம் மற்றும் மயக்கம் ஆகியவற்றை அறிகுறிகளாகக் கொடுக்கும்.

9. ஹெமிபிலெஜிக்

ஹெமிபிலெஜிக் ஒற்றைத் தலைவலி என்பது ஒரு அரிதான வலி. வெகு சிலருக்கே வரலாம். ஆனால் கடுமையான ஒற்றைத் தலைவலியாக இருக்கும். இது பொதுவாக உங்கள் உடலின் ஒரு பக்கத்தில் தற்காலிகமாக முடக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு பக்கம் பெரிதாக உணர்வு இல்லாமல் செயலிழக்கலாம். சிலருக்கு, ஆரா அறிகுறிகளும் சில வாரங்கள் வரை நீடிக்கலாம்.

10. ஆப்தல்மோப்ளெஜிக் மைக்ரேன்

கண் தசைகளில் பலவீனம் உள்ள மற்றொரு அரிய வகை ஒற்றைத்தலைவலி, ஆப்தல்மோப்ளெஜிக் மைக்ரேன்.

இது குறிப்பாக இளைஞர்களைப் பாதிக்கிறது. கூடுதலாக, பார்வை தொடர்பான தொந்தரவுகள், கண்களால் அங்கும் இங்கும் பார்க்க சிரமம் இருப்பது, கண் இமைகள் வீக்கமாக இருப்பது, நீர்கோர்த்தது போலக் காட்சியளிப்பது இதற்கான் அறிகுறிகளாகும்

11. வெஸ்டிபுலர் தலைவலி

ஒற்றைத் தலைவலியும் வெர்டிகோவும் சேர்ந்தது. தலைச்சுற்றல் மற்றும் வெர்டிகோ போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். வேகமாகச் செல்வதைப் பார்த்தால் தலை சுத்துவது, திரும்பி பார்த்தால் தலை சுத்துவது போல உணர்வு, அதிகச் சத்தம் கேட்டு எரிச்சல் ஆவது அல்லது தலைவலி வருவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

12. ஸ்டேட்டஸ் மைக்ரேனோசஸ்

இதுவும் ஒற்றைத் தலைவலியின் ஒரு வகைதான். இதில் தலைவலி அறிகுறிகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து நீடிக்கலாம். இந்த ஒற்றைத் தலைவலியால், நீடித்த வலி இருக்கலாம். வாந்தி வரலாம். அதிகத் தாகம், உடலில் நீர்ச்சத்துக் குறைந்தது போன்ற உணர்வைப் பெறலாம். தூக்கம் வராமல் தவிக்கலாம்.

மேற்சொன்னவை எல்லாம் வலியின் வகைகள். ஒவ்வொருவரும் அவரது உடல்நிலைக்கு ஏற்ப வலியின் வேதனையை அனுபவிக்கலாம். ஆனால், வலி என்பது உடலில் கழிவு இருப்பதன் அறிகுறி. எந்த வகை வலி இருந்தாலும், அவை கழிவு இருப்பதன் அறிகுறிதான். கழிவை நீக்கிவிட்டால் வலி வராது. வலியை தீர்க்க மருந்துகளை உட்கொள்வது, தற்காலிக ரெமடி மட்டுமே. முழுமையான தீர்வு என்பது வலி வராமல் செய்வதுதான். அதனால் வலி ஏற்படுகின்ற காரணம், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள். கழிவுகளை அகற்றுவதே முழுமையான தீர்வு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com