
டென்ஸல் வாஷிங்டனின் ‘தி ஈக்வலைஸர் 3’ படத்தைப் பார்க்கும்போது Fan boy-யாக மாறி விஜய் எழுந்து நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இந்த படம் ரீலீஸாகுவதற்கு முன்பே விஜய்யின் அடுத்த படமாக 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில், விஜய்யின் தோற்றத்தை வித்தியாசப்படுத்த 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவர் உடலை ஸ்கேன் செய்கின்றனர்.
அதன் மூலம் அவர்கள் நினைத்தபடி தோற்றத்தை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஜய், அங்குள்ள திரையரங்கம் ஒன்றில் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி ஈக்வலைஸர் 3’ (The Equalizer 3) படத்தை பார்த்துள்ளார்.
அதில் டென்ஸல் வாஷிங்டன் வரும் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் ‘ஃபேன் பாய்’ ஆக எழுந்து நின்று தன் கைகளை விரித்து கொண்டாடும் புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் இந்த புகைப்படத்தை எடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust