Samyutha Vishnukanth விவாகரத்து: இரண்டே மாதங்களில் முறிந்த திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

யூடியூபில் வெளியான 'நிறைமாத நிலவே' தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. ஜீ தமிழில் வெளியான 'ரஜினி', 'கோகுலத்தில் சீதை' ஆகிய சீரியல்களில் நடித்தவர் விஷ்ணுகாந்த்.
Samyutha Vishnukanth விவாகரத்து: இரண்டே மாதங்களில் முறிந்த திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
Samyutha Vishnukanth விவாகரத்து: இரண்டே மாதங்களில் முறிந்த திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!Instagram

சீரியலில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணு காந்த் தங்கள் திருமணத்தை முறித்துக்கொண்டுள்ளனர். இந்த செய்தி அவர்களது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது

திரைப்படங்களில், அல்லது சீரியல்களில் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகையர் காதலித்து திருமணம் செய்துகொள்வது காலம் காலமாக நடந்து வருகிறது.

செந்தில்-ஸ்ரீஜா தொடங்கி, சித்தார்த்-ஸ்ரெயா வரை, சமீபத்தில் பலர் அப்படி ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடர் மூலம் அறிமுகமாகி காதலிக்க தொடங்கினர் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணுகாந்த்.

யூடியூபில் வெளியான 'நிறைமாத நிலவே' தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. ஜீ தமிழில் வெளியான 'ரஜினி', 'கோகுலத்தில் சீதை' ஆகிய சீரியல்களில் நடித்தவர் விஷ்ணுகாந்த்.

சிப்பிக்குள் முத்து தொடரில் இவர்கள் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தனர். சம்யுக்தா விஷ்ணுகாந்தின் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொள்ளும். இவர்களுக்கு ரசிகர்களும் கூடினர். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அறிவித்தனர்.

தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தடபுடலாக நடந்தது இவர்களது திருமணம்.

Samyutha Vishnukanth விவாகரத்து: இரண்டே மாதங்களில் முறிந்த திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா பதில் : ”கூர்மையான பொருட்களை மறைத்து வைக்கணும் ”

இந்நிலையில், சமீபத்தில் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்தும் திருமணம் மற்றும் காதலித்த போது பதிவிட்ட புகைப்படங்கள், ரீல்கள், வீடியோக்களை இருவரும் அகற்றினர். இதனால் இவர்கள் இருவரும் பிரியவுள்ளதாக தகவல்கள் பாவின.

மேலும் நடிகை சம்யுக்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தனியே இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "உனது திரிக்கப்பட்ட உண்மைக் கதைக்காக காத்திருக்கிறேன்".

"சிரிப்பை விட அதிகமாக கண்ணீரை நீங்கள் பெரும்போது அந்த இடத்திலிருந்து விலகிவிடுங்கள். ஒருவர் மீது கொண்ட அன்பிற்காக மட்டும் அனைத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை"

என்பது போன்ற கேப்ஷன்களை பதிவிட்டார். இது அவர்களது பிரிவை இன்னும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.

இது குறித்து பல நாட்களாக மௌனம் காத்து வந்த நடிகர் விஷ்ணு, தன் இன்ஸ்டா ஸ்டொரியில், "'Affairs' turns to say 'true love' into 'fake love'" என்று பதிவிட்டிருந்தார், மேலும் பதிவு ஒன்றில், "மௌனங்கள் எதுவுமற்றது அல்ல. அதில் உண்மைகளும், பதில்களும் நிறைந்திருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

இருவரும் பிரிந்துவிட்டனர் எனவும், சம்யுக்தாவுக்கு திருமணம் மீறிய உறவு இருந்ததால் பிரிந்தனர் எனவும் கூறப்பட்டது.

விஷ்ணுகாந்த் அளித்த பேட்டி ஒன்றில் சம்யுக்தாவின் தந்தையால் தான் தாங்கள் பிரிந்தனர் என சந்தேகிப்பதாக தெரிவித்திருக்கிறார். "கல்யாணம் ஆகி 15 நாள் தான் சேர்ந்து இருந்தோம். ஷூட்டிங் பிசி ல ரெண்டு பேருமே இருந்தோம்" என்றார்.

தவிர, தன்னையும் தன் தாயையும் விட்டுச் சென்ற அப்பா எனக்கு வேண்டாம் எனக் கூறி வந்த சம்யுக்தா, திடீரென அவரது பேச்சைக் கேட்க ஆரம்பித்தார் எனவும், கணவனை விட தன் தோழி தான் முக்கியம் எனக் கூறியதால் பிரச்னை வெடித்தது எனவும் விளக்கமளித்திருந்தார்

Samyutha Vishnukanth விவாகரத்து: இரண்டே மாதங்களில் முறிந்த திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
மகாலட்சுமி - ரவீந்தர் : சீரியல் நடிகையை கரம்பிடித்த தயாரிப்பாளர் - காதல் திருமணமா?

இதற்கு பதிலளித்து லைவ் வீடியோவில் பேசிய சம்யுக்தா, விஷ்ணுகாந்த் மிகவும் கோபக்காரர் எனவும், பெண்கள் தனக்கு அடங்கிப் போகவேண்டும் என நினைக்கும் மனிதர் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

"என்னோட எல்லா சுதந்திரத்தையும் பறிச்சாச்சு, என் ஆசை, கனவு எல்லத்தையும் நான் தியாகம் செய்துவிட்டேன்" எனக் கூறிய சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன்னை சக மனிதனாக கூட நடத்தவில்லை எனவும் கூறியிருந்தார்

மேலும், "என் தோழி ஒரு lesbian, அதனால் நான் அவளிடம் கொஞ்சம் பார்த்து பழக வேண்டுமென என்னை எச்சரித்தார் விஷ்ணு".

"நான் அவரை விட 10 வயது சின்ன பெண். என் வயதைக் கூட பொருட்படுத்தாமல், 24 மணி நேரமும் உடல் ரீதியாக அவரது தேவையை நான் பூர்த்தி செய்யவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். இணங்க மறுத்தால் அதற்கும் சண்டைக்கட்டுவார்"

விஷ்ணுகாந்த் இதைவிட கீழ்தரமாக நடந்துகொள்ள முடியாது எனவும், இதற்கும் மேல் அமைதியாக அவர் செய்யும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாது எனவும் தெரிந்ததால் தான் பிரிந்ததாக கூறியிருக்கிறார் சம்யுக்தா.

திருமணம் செய்துகொள்ளப் போகும் அனைவரும் காதலிக்கவேண்டும். காதலித்து திருமணம் செய்யுங்கள், கடமைக்கு அல்ல எனவும் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இவர்கள் இருவரது வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன

Samyutha Vishnukanth விவாகரத்து: இரண்டே மாதங்களில் முறிந்த திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
"நான் முற்றிலும் மாறியுள்ளேன்" - சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த நாக சைதன்யா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com