எவரெஸ்ட்டில் காணாமல் போன அண்ணனின் உடலை 20 ஆண்டுகள் கழித்து தேடும் தம்பியின் பயணம்

1999ம் ஆண்டு மைக்கெல் மேத்திவ்ஸ் பிரிட்டனிலிருந்து எவரெஸ்ட்டில் ஏறிய மிகச் சிறிய வயது நபர் என்ற பெருமையைப் பெற்றார். அடுத்த சில கணங்களிலேயே அவர் காணாமலும் போனார். அதன் பின் அவர் தொடர்பான எந்த தகவலுமே கிடைக்கவில்லை.
எவரெஸ்டில் காணமல் போன அண்ணனின் உடலை 20 ஆண்டுகள் கழித்து தேடும் தம்பியின் பயணம்
எவரெஸ்டில் காணமல் போன அண்ணனின் உடலை 20 ஆண்டுகள் கழித்து தேடும் தம்பியின் பயணம்Disney

ஸ்பென்சர் மாத்திவ்ஸ் ஒரு முன்னாள் டி.வி பிரபலம். இப்போது எவரெஸ்ட் மலையில் மரணித்த தனது அண்ணனின் உடலைத் தேடும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

1999ம் ஆண்டு மைக்கெல் மேத்திவ்ஸ் பிரிட்டனிலிருந்து எவரெஸ்டில் ஏறிய மிகச் சிறிய வயது நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

அடுத்த சில கணங்களிலேயே அவர் காணாமலும் போனார். அதன் பின் அவர் தொடர்பான எதுவுமே கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது தனது அண்ணனின் உடலைத் தேடி கண்டுபிடிக்க உறுதி எடுத்துள்ளார் ஸ்பென்சர்.

மைக்கேல் காணாமல் போனது கடலில் இருந்து 8000 அடி மேலே "டெத் சோன்" என்று கூறப்படும் இடத்தில். இந்த உயரத்தில் மூச்சு விடத் தேவையான ஆக்ஸிஜன் கூட கிடைக்காது.

"என் அண்ணன் மைக்கெல் தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார்" என அவரை நினைவு கூறுகிறார் ஸ்பென்சர்.

மைக்கெல் இறக்கும் தருவாயில் ஸ்பென்சருக்கு வெறும் 10 வயது தான். தனது சகோதரனின் கடைசிக் காட்சிகளை கண்டறிய இவரின் தேடல் ஆவணப்படமாகவும் உருவாகியிருக்கிறது.

இதில் 1999ம் ஆண்டு மைக்கெல் உடன் மலையேற்றம் மேற்கொண்ட கனடிய மலையேற்ற வீரர் டேவ் ரோட்னே கொடுத்த நம்பமுடியாத வீடியோ பதிவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

எவரெஸ்டில் காணமல் போன அண்ணனின் உடலை 20 ஆண்டுகள் கழித்து தேடும் தம்பியின் பயணம்
ஹோமுஸ் : உண்ணப்படும் மண்; மசாலா மலை; உப்பு தெய்வம்- அதிசயங்கள் நிறைந்த அறியப்படாத தீவு

டிஸ்னி+ டாக்குமென்டரிஸின் இந்த தேடலில் சாகச வீரர் பேர் கிரில்ஸ் மற்றும் மலையேற்ற வீரர் நிர்மல் புஜாராவும் பங்கெடுத்துள்ளனர்.

மைக்கேல் இளம் மலையேற்ற வீரராக எவரெஸ்ட்க்கு செல்லும் சில மாதங்களுக்கு முன்னர் தான் பேர் கிரில்ஸும் மைக்கெலும் சந்தித்துள்ளனர்.

எவரெஸ்டில் காணமல் போன அண்ணனின் உடலை 20 ஆண்டுகள் கழித்து தேடும் தம்பியின் பயணம்
Travel: எவரெஸ்ட் முதல் கிளிமாஞ்சாரோ வரை - உலகின் மிக உயரமான மலைச்சிகரங்கள்

பேர் கிரில்ஸ் தனது 23 வயதில் எவரெஸ்டின் உச்சியை எட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"உலகின் உச்சியில் நிற்க விரும்பும் ஒரு சக இளைஞனின் மனதையும் ஆவியையும் சந்திக்கும் தருணம் இதில் இருக்கிறது" என ஆவணப்படம் குறித்து பேர் கிரில்ஸ் கூறியுள்ளார்.

இந்த ஆவணப்படத்துக்கு ஃபைண்டிங் மைக்கெல் என பெயர் வைத்துள்ளனர். இது மார்ச் 3ம் தேதி வெளியாகியிருக்கிறது.

எவரெஸ்டில் காணமல் போன அண்ணனின் உடலை 20 ஆண்டுகள் கழித்து தேடும் தம்பியின் பயணம்
எவரெஸ்ட் : உலகின் மிக பெரிய மலைச்சிகரம் வளருகிறதா? - 7 ஆச்சரிய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com