”என் மனைவிக்காக வந்தேன்” மேடையில் கௌரி கானுக்கு நன்றி சொன்ன கணவர் ஷாருக்

மும்பையிலுள்ள ஷாருக் கானின் மன்னத் இல்லத்தின் வெளியிடப்படாத புகைப்படங்கள், மன்னத் இல்லம் வட்டிவமைக்கப்பட்ட விதங்கள், கௌரியின் இன்னும் சில முக்கியமான பிராஜெக்டுகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
”என் மனைவிக்காக வந்தேன்” மேடையில் கௌரி கானுக்கு நன்றி சொன்ன கணவர் ஷாருக்
”என் மனைவிக்காக வந்தேன்” மேடையில் கௌரி கானுக்கு நன்றி சொன்ன கணவர் ஷாருக்ட்விட்டர்

கட்டிட உள்வடிவமைப்பு தொடர்பாக நடிகர் ஷாருக் கானின் மனைவி கௌரி கான் எழுதியுள்ள காஃபி டேபிள் புத்தகம் வெளியாகியுள்ளது. “My Life In Interior Design” என தலைப்பிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தை ஷாருக் கான் வெளியிட்டார்

கடந்த மே 15 திங்கட்கிழமை அன்று மும்பையில் புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

பாலிவுட்டின் சூப்பர்ச்டார் என்றழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக் கான். இவரது மனைவி கௌரி கான் ஒரு பிரபலமான இன்டீரியர் டிசைனர். இவர் வடிவமைத்த பொருட்கள் பலவும் இணையதளங்களில் விற்பனைக்கு உள்ளன.

சமீபத்தில் கூட இவர் வடிவமைத்த ஒரு குப்பைத் தொட்டி 15,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது பேசுபொருளானது.

இந்நிலையில், கௌரி கான் ஒரு இன்டீரியர் டிசைனராக தன் பயணத்தை பற்றி எழுதியுள்ள காஃபி டேபிள் புத்தகம் தான் இந்த “மை லைஃப் இன் இன்டீரியர் டிசைன்”. இதில் ஷாருக் கான் மற்றும் அவரது குடும்பத்தின் சில எக்ஸ்க்ளூசிவான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், மும்பையிலுள்ள ஷாருக் கானின் மன்னத் இல்லத்தின் வெளியிடப்படாத புகைப்படங்கள், மன்னத் இல்லம் வட்டிவமைக்கப்பட்ட விதங்கள், கௌரியின் இன்னும் சில முக்கியமான பிராஜெக்டுகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

”என் மனைவிக்காக வந்தேன்” மேடையில் கௌரி கானுக்கு நன்றி சொன்ன கணவர் ஷாருக்
"தளபதி விஜய் சுவையான உணவளித்தார்"- சென்னை அனுபவங்களை ட்வீட் செய்த ஷாருக் கான்

விழாவில் பேசிய ஷாருக் கான், தான் நடிகனாக வளரும் சமயத்தில் மனைவி கௌரி கான் தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றியும், தங்கள் மூன்று குழந்தைகளை இருவரும் சேர்ந்து வளர்த்தது பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும், ஒரு நாளின் முடிவில் அது “திருபிதிகரமான நாளாக இருக்கவேண்டும் என கௌரி விரும்புவார். அதுவே சந்தோஷமான நாள் எனவும் அவர் கூறுவார்” என்று குறிப்பிட்டார் ஷாருக்.

எந்த வயதிலும் தங்கள் கனவுகளை துரத்தி ஓடுவதில் தவறில்லை. இதனை நான் கௌரியிடம் இருந்து கற்றுக்கொண்டேன், புத்தகத்தை படிப்பவர்களுக்கும் அது புரியும் என பேசிய நடிகர், தன் மனைவிக்கு, அவர் செய்த பணிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார்

”என் மனைவிக்காக வந்தேன்” மேடையில் கௌரி கானுக்கு நன்றி சொன்ன கணவர் ஷாருக்
ஷாருக் கான் மனைவி வடிவமைத்த குப்பைத் தொட்டி - விலை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com