
கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசனை மாணவர்கள் கூப்பாடு போட்டு தமிழில் பேசவைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டம் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அங்கு மாணவர்களோடு உரையாடினார் கமல். தனது அனுபவத்தை அவர் மாணவர்களுக்கு பகிர்ந்தார்.
அப்போது ஆங்கிலத்தில் பேசினார். இதனால் அவர் பேச பேச மாணவர்கள் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஒன்றாக "தமிழ் தமிழ்" எனக் கூச்சலிட, கமல் ஹாசனும் தமிழில் பேச தொடங்கினார்.
"நன்றி நன்றி" என கமலின் பேச்சு தமிழில் மாறியதும் மாணவர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர்
"எங்க இன்னொருவாட்டி சொல்லுங்க" எனக் கமல் ஹாசன் கேட்க, மீண்டும் மாணவர்கள் "தமிழ் தமிழ்" என முழக்கமிட்டனடர். அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், "நடுவுல யாரோ தமில்னு சொன்ன மாதிரி இருந்துச்சு, தமிழ்!" என செல்லமாக அதட்டவும் செய்தார்.
தனது அனுபவத்தை பகிர வந்திருப்பதாக கூறிய கமல், உங்களுக்கு விருப்பமும் பொறுமையும் இருந்தால் நான் பேசுகிறேன் என்றார். தன்னுடன் அனுபவத்தை பகிர பலர் அவருக்கு கிடைத்தபோதும், அதை கேட்கும் பொறுமை இல்லை எனக் கூறியவர், இன்று பொறுமை இருந்தும், தேவைகள் மாறிவிட்டது எனப் பேசினார்.
"லைஃப்ல எல்லா பாலும் சிக்சர் அடிக்க முடியாது. வர பால கணிச்சு அதுக்கு தகுந்தமாதிரி ஆடணும். அது உங்கள் பொறுப்பு" என்றார். நமக்கான பாதையை நாம் தான் சரியாக வகுக்கவேண்டும் என்றார்.
கெமிஸ்ட்ரி, கணக்கு பாடங்கள் எனக்கும் பிடிக்காது தான், ஆனால் வாழ்க்கைக்கு தேவையான அளவு அதனை கற்றுகொள்ளவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் உலகநாயகன்.
அன்பே சிவம் படத்தில் இடம்பெற்ற யார் யார் சிவம் பாடலையும் பாடியசத்தினார் கமல் ஹாசன்.
எப்போதும் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்துவரும், இந்தி திணிப்புக்கு எதிராக வாதிடும் கமல் ஹாசனுக்கு மாணவர்கள் அன்புக் கட்டளையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust