பொன்னியின் செல்வன்: இறந்துவிட்டாரா இளவரசன்? 2ஆம் பாகம் பார்ப்பதற்கு முன் ஒரு சின்ன ரீகேப்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது. இரண்டாம் பாகம், நாளை 28 ஏப்ரல் அன்று வெளியாகிறது. படம் வெளியாகும் முன் ஒரு முறை முதல் பாகத்தை திரும்பி பார்த்து வந்துவிடுவோம்!
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 Twitter

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இதில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், விக்ரம், ஜெயம் ரவி என இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

கல்கி எழுதிய வரலாற்று நாவலை தழுவி படம் எடுக்கப்படுள்ளது. இளங்கோ கிருஷ்ணன், கிருத்திகா நெல்சன், கபிலன், சிவா அனந்த் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். முதல் பாகம் 500 கோடி வசூலை எட்டியது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் டிவிட்டர்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது. இரண்டாம் பாகம், நாளை 28 ஏப்ரல் அன்று வெளியாகிறது.

படம் வெளியாகும் முன் ஒரு முறை முதல் பாகத்தை திரும்பி பார்த்து வந்துவிடுவோம்!

வானில் ஒரு வால் விண்மீன் தோன்றுகிறது. இதனை அரசக் குடும்பத்தில் இருந்து ஒரு உயிரை பலி வாங்கும் குறியீடாக ஜோசியர்கள் கணிக்கின்றனர்.

உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு படுத்தப் படுக்கையாக உள்ளார் சோழ தேசத்து அரசர் சுந்தர சோழர். இவருக்கு மூன்று குழந்தைகள் - ஆதித்த கரிகாலன், குந்தவை மற்றும் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் அருண்மொழி வர்மன்

முடி இளவரசனான ஆதித்த கரிகாலன் தஞ்சையில் பொன் மாளிகை எழுப்பிக்கொண்டிருக்கிறான், பெற்றோரை அங்கு வரச் சொல்லி ஓயாது ஓலை அனுப்பிக் கொண்டிருக்கிறான். ராஷ்டிரக் கூடர்களுடன் போர் புரிய வடக்கே சென்றிருக்கிறான்.

இளம் வயதில் நந்தினியை காதலிக்கிறான் ஆதித்தன். குந்தவையால் காதல் கைக்கூடாமல் போகிறது.

ஆண்டுகள் கடந்து பாண்டியனை கொல்ல சென்ற இடத்தில் பாண்டியனுடன் நந்தினி இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் பாண்டியனை நந்தினி கண்முன்னே கொல்கிறான். இதற்கு பழிதீர்க்க துடிக்கிறாள் நந்தினி.

பொன்னியின் செல்வன் 2
Ponniyin Selvan : குந்தவைக்கு என்ன பிடிக்கும்? Trisha பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 Twitter

இலங்கையை வெல்ல பெரும் படையுடன் சென்றிருக்கிறான் இளைய இளவரசன் அருண்மொழி வர்மன். உடன் பெரிய வேளார் இருக்கிறார்

பழையாறையில் இருந்தபடி நாட்டை, நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கிறாள் மகள் குந்தவை.

சேவூர் போரில் ஆதித்த கரிகாலன் பாண்டிய மன்னனின் தலையை வெட்டி கொன்றதற்கு பழி தீர்க்க சோழ நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர் பாண்டியர்கள் - பாண்டிய ஆபத்துதவிகள்! இவர்களை வழிநடத்தி வருகிறாள் பழுவூர் இளையராணி நந்தினி.

சோழ நாட்டின் நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையர். சோழ நாட்டை பழிதீர்க்க, ஆதித்த கரிகாலனை கொல்ல சதி செய்து பழுவூர் அரசரை மணக்கிறாள் நந்தினி.

கணவனை கைப்பாவையாக்கி, தன் திட்டத்தின் அங்கமாக சின்ன பழுவேட்டரையரின் (சோழ நாட்டின் தளபதி) மகளை மதுராந்தகனுக்கு திருமணமும் செய்து வைக்கிறாள்.

சுந்தர சோழரின் மூத்த சகோதரரான கண்டராதித்தரின் மகன் தான் மதுராந்தகன். சிவபக்தர். மதுராந்தகன் கைக்குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிடுகிறார். மகனை சிவ பக்தனாக வளர்க்கச்சொல்லி மனைவியிடம் சத்தியம் வாங்கிவிட்டு சாகிறார்.

நாடாளும் பொறுப்பை சுந்தர சோழரிடம் ஒப்படைத்து செல்கிறார்

ஆனால், நந்தினியின் வசத்தால், மனம் மாற்றப்பட்டு, அரியணை ஆசைக் கொள்கிறான் மதுராந்தகன். அவனை அரசானாக்க, சதி திட்டம் தீட்ட கடம்பூரில் ஒன்று கூடினர் சிற்றரசர்கள்.

பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன்: யார் இந்த நந்தினி? சோழர்களுக்கும் இவருக்கும் என்ன பகை?

விஷயம் அறிந்து தனது நண்பனான வந்தியத்தேவனை ஒற்று வேலைக்கு அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன். வாணர் குலத்து இளவரசன் தான் இந்த வந்தியத்தேவன். கடம்பூரில் நடப்பதை சுந்தர சோழரிடமும், குந்தவையிடமும் தெரிவிக்கிறான்.

குந்தவையின் உத்தரவின் பேரில் இளவரசன் அருண்மொழி வர்மனை தேடி இலங்கை செல்கிறான் வந்தியத்தேவன். அங்கு அருண்மொழியை கொல்ல பாண்டியனின் ஆபத்துதவிகள் வருகின்றனர்.

மறுபுறம், பொன்னியின் செல்வனை சிறைப்பிடித்து வரச்சொல்லி அரசர் மூலம் செய்தி அனுப்புகிறாள் நந்தினி. அருண்மொழி வர்மன் கைது செய்யப்பட்டு வரும் வழியில் ஆபத்துதவிகள் தாக்கியதில் கப்பல் தீப்பிடித்து தண்ணீரில் விழுகிறான் பொன்னியின் செல்வன்.

அருண்மொழி வர்மன் இறந்துவிட்டதாக தற்போது செய்தி பரவியுள்ளது.

அருண்மொழி வர்மன் இறந்துவிட்டானா? பழி தீர்த்துக்கொண்டாளா நந்தினி? சோழ நாட்டின் அடுத்த அரசன் யார்?

பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2: ”இரண்டாம் பாகத்தில் தான் கதையே தொடங்குகிறது” - படக்குழு சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com