AK 63 முதல் கொரோனா குமார் வரை: படப்பிடிப்புக்கு முன்னரே ட்விஸ்ட்களை சந்தித்த படங்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட படங்கள் சில தயாரிப்பு பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதையும் காண முடிகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ்களை சந்தித்த படங்கள் குறித்து காணலாம்.
AK 63 முதல் கொரோனா குமார் வரை: படப்பிடிப்புக்கு முன்னரே ட்விஸ்ட்களை சந்தித்த படங்கள்
AK 63 முதல் கொரோனா குமார் வரை: படப்பிடிப்புக்கு முன்னரே ட்விஸ்ட்களை சந்தித்த படங்கள்Twitter

பெருந்தொற்றுக்கு பிறகு திரையுலகம் முழுவேகத்தில் இயங்க ஆரம்பித்திருக்கிறது. பல புதிய படங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

நாயக, நாயகிகள் அடுத்தடுத்த படங்களுக்கான லைன்-அப்களுடன் காத்திருக்கின்றனர்.

மொத்த தமிழ் சினிமாவும் பிசியாக இருப்பதனால் ரசிகர்களுக்கு 2023ன் அடுத்தடுத்த மாதங்களும் பெருவிருந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட படங்கள் சில தயாரிப்பு பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதையும் காண முடிகிறது.

அப்படி படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் களை சந்தித்த படங்கள் குறித்து காணலாம்.

ரஜினிகாந்த்

Rajinikanth
RajinikanthTwitter

ரஜினி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், சிவ் ராஜ்குமார், ஜாக்கி ஷார்ஃப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இதற்கு பிறகு ரஜினிகாந்த் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

சூப்பர் ஸ்டாருக்காக அவரது ரசிகர்கள் விரும்படியான கதையை உருவாக்கிய பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என சிபி சக்கரவர்த்தி கூறியிருந்தார்.

ஆனால் ரஜினிகாந்தின் அடுத்தப்படமான தலைவர் 171 ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் என அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

வணங்கான்

இயக்குநர் பாலாவுடன் நடிகர் சூர்யா இணைய வணங்கான் படம் தொடங்கப்பட்டது.

பிதாமகன் படத்துக்கு பின்னர் இருவரும் இணைவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இரண்டு கட்ட படப்பிடிப்புக்கு பின்னர் இயக்குநருக்கும் நடிகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் சூர்யா விலகினார்.

தற்போது இந்த படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சூர்யா இயக்குநர் சிவாவுடன் சூர்யா 42 படத்தில் பணியாற்றிவருகிறார்.

AK 63 முதல் கொரோனா குமார் வரை: படப்பிடிப்புக்கு முன்னரே ட்விஸ்ட்களை சந்தித்த படங்கள்
ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Worstfilm - என்ன காரணம்?

கொரோனா குமார்

Silambarasan TR
Silambarasan TRTwitter

ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் படங்களின் இயக்குநரான கோகுல் மற்றும் சிம்பு இணைந்து கொரொனோ குமார் படத்தை தொடங்க இருந்தனர்.

பத்துதல படப்பிடிப்புக்கு பிறகு இந்தபடம் தொடங்கப்படலாம் என நினைத்திருந்த சூழலில் கடந்த 6 மாதங்களாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் லவ் டுடே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பிரதீப் ரங்கனாதன் இந்த படத்தில் நடிக்கலாம் என பேசப்படுகிறது.

சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் நிருவனத்தின் தயாரிப்பில் எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தை அறிவித்துள்ளார்.

AK 63 முதல் கொரோனா குமார் வரை: படப்பிடிப்புக்கு முன்னரே ட்விஸ்ட்களை சந்தித்த படங்கள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகல் - காரணம் என்ன?

AK 68

Vignesh Shivan : அஜித் பட வாய்ப்பை தவறவிட்டது ஏன்? - AK62 என்னவாகிறது?
Vignesh Shivan : அஜித் பட வாய்ப்பை தவறவிட்டது ஏன்? - AK62 என்னவாகிறது?Twitter

துணிவு படத்துக்கு பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அஜித் குமார் என்பது அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் கதை அஜித்தை கவராததால் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.

ஏகே 68 படத்தில் பணியாற்ற பல முன்னணி இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று, மகிழ்திருமேனி இயக்குவார் எனக் கூறப்பட்டு வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

AK 63 முதல் கொரோனா குமார் வரை: படப்பிடிப்புக்கு முன்னரே ட்விஸ்ட்களை சந்தித்த படங்கள்
வட சென்னை 2 எப்போது? - வெற்றிமாறன் சொன்ன பதில்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com