
சின்னத்திரை நடிகையான கல்யாணி முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு பின்னர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பலரது மனதை கனக்க செய்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையில் பிரபலமானவர் பூர்ணித்தா என்ற கல்யாணி. ஜெயம், அள்ளி தந்த வானம், ரமணா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தார், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.
இவர் மருத்துவரான ரோஹித் அரவிந்தாக்ஷன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நவ்யா என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறார்
திருமணத்திற்கு பிறகு பெரிதாக இவர் திரையில் தோன்றவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்தார்.
கல்யாணி சமீபத்தில் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
மிகவும் கடுமையான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை ஒன்றை அவர் மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களாக நிலை கொஞ்சம் மோசமாக தான் இருந்தது எனவும் கூறியுள்ளார்
தனது நிலை சற்று இப்போது தேறி வருகிறது என்றும் கூறியிருக்கிறார். எனினும் அவர் சந்தித்த கஷ்டங்களை அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
”2016ஆம் ஆண்டு சிறிய முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை ஒன்றினை மேற்கொண்டேன். உடல் நலம் தேறியது, அதன் பிறகே எனது மகள் நவ்யா பிறந்தாள்.
கடந்த ஆறு மாதங்களாக மீண்டும் முதுகில் வலி தோன்ற ஆரம்பித்தது. முதுகு தண்டுவட நிபுணரை அணுகினோம். நான் கேட்கக் கூடாது என்று நினைத்ததை கேட்டேன்”
”எனது முந்தைய அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை எனவும், இன்னும் நான் முழுமையாக குணமடையவில்லை என்றும் மருத்துவ நிபுணர் கூறினார். மேலும், அந்த சிகிச்சையின் போது தண்டுவடத்தில் பொறுத்தப்பட்ட பிளேட் மற்றும் ஸ்க்ரூக்களை நீக்கி புதிய எலும்பினை பொறுத்தவேண்டும் என்றனர்.
மற்றொரு நபரின் முதுகு தண்டுவடத்தை!
இம்முறை நான் குணமடைய நீண்ட காலம் எடுக்கலாம். இந்த இக்கட்டான தருணத்தில் எனக்கு துணை நின்ற மருத்துவர்கள், என் கைகளை இறுக பிடித்து உருதுணையாக இருக்கும் என் கணவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
”குறிப்பாக எனது 5 வயது மகள் நவ்யா என்னை கவனித்துகொள்ளும் விதம் மற்றும் இந்த சிறிய வயதில் அவள் என் மீது காட்டும் அன்பும் அனுதாபமும் என்னால் நம்ப முடியாத ஒன்று.
நான் செல்ல இன்னும் நெடுந்தூரம் இருந்தாலும், என் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய நன்றி.
இனியும் எனது உடலை, அதன் நலத்தை துச்சமாக எடுத்துக்கொள்ளமாட்டேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
நேற்று அவர் பதிவிட்ட இந்த பதிவுக்கு பலரும் ஆறுதல்களும், குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கல்யாணி ஒரு முறை நேர்காணல் ஒன்றில், சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மனம் திறந்திருந்தார். பெயர் குறிப்பிட விரும்பவில்லை என்று கூறிய கல்யாணி, இன்று அந்த நபர் மிகப்பெரிய இசைக்கலைஞர் என்பதை மட்டும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust