நடிகர் மனோபாலா இன்று காலமானார் - ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல்!
நடிகர் மனோபாலா இன்று காலமானார் - ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல்!Twitter

நடிகர் மனோபாலா மறைவு: ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் வரை- பிரபலங்கள் இரங்கல்!

தமிழ் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல் நலக் குறைவால் காலமானார்.

கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக சமீப காலமாகவே சிகிச்சைப் பெற்றுவந்தார் மனோபாலா. இந்நிலையில், இன்று சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்துள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்

தாங்க முடியாத செய்தி... மனதை உலுக்கி எடுக்கிறது.. நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது.... போய்வாருங்கள் மாமா....                           - சேரன் இரங்கல்

ஈகோ இல்லாத ஒரு கலைஞர்... இவரோட இழப்ப என்னால தாங்க முடியல” -மனோபாலா மறைவிற்கு நடிகர் சார்லி இரங்கல்

"ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" -மனோபாலா மறைவிற்கு நடிகர் கருணாஸ் இரங்கல்

நடிகர் மனோபாலா மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல்!

“இதயம் நொறுங்கியதாக உணர்கிறேன்; இன்று காலையில்தான் அவரிடம் போனில் பேசினேன். இருவரும் சிரித்து, சண்டையிட்டு, சாப்பிட்டு பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளோம்; நாம் அனைவரும் அவரை மிஸ் செய்வோம்” - மனோபாலா மறைவுக்கு நடிகை ராதிகா இரங்கல்

நடிகர் மனோபாலா மறைவிற்கு இயக்குநர் சீனுராமசாமி இரங்கல்!

“அண்ணன் மனோபாலாவின் மறைவு செய்தியால் உறைந்தேன்.

மனோபாலா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

மனோபாலா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

"மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரடைந்தேன்" - இளையராஜா இரங்கல்!

உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்; சாதரண நடிகர்களையும் மதிப்பவர்” - மனோபாலா மறைவிற்கு நடிகர் தம்பி ராமையா இரங்கல்

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு, வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது!

மனோபாலா மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல்!

"திறமையான இயக்குநர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு!”

னோபாலா மறைவுக்கு சீமான் இரங்கல்!

மனோபாலா மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல்!

மனோபாலா மறைவுக்கு “இதயம் நொறுங்கியதாக” லோகேஷ் கனகராஜ் ட்வீட்!

logo
Newssense
www.newssensetn.com