"அதானி ஒரு டை பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?
"அதானி ஒரு டை பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?Twitter

"அதானி ஒரு டைம் பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?

அதானிக்கு இப்போது நடக்கும் நிகழ்வுகளை கண்முன்னே காட்டும் இந்த ட்வீட் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதமே போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது இணையவாசிகள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் அதானி. இவர் சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் 3வது பெரிய பணக்காரராகவும் திகழ்ந்தார்.

ஆனால் ஹிண்டன்பெர்க் நிறுவனம் அவர் மோசடி செய்வதாக வெளிப்படுத்தியதை அடுத்து அவரது பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.

இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து தூக்கி எறியப்பட்ட அதானி இந்தியாவிலும் இரண்டாவது இடத்துக்கு இறங்கினார்.

அதானி கடந்த 2021 மற்றும் 22 ஆண்டுகளில் மட்டுமே பெரும் பணம் சம்பாதித்தார். இதனை பொருளாதார அறிஞர்களே வியந்து பார்த்தனர்.

"அதானி ஒரு டை பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?
அதானி குழுமம் : 100 பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை இழந்த அதானி - அடுத்து என்ன?

ஆதனால் ஹிண்டன்பெர்க் அறிக்கையும் பலருக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.

ஏற்கெனவே ஹிண்டன்பெர்க் தலைவர் நேதன் ஆண்டர்சன் கடந்த 2018ம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தைக் குறித்து விசாரித்து வருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அதானி ஒரு டைம் பாம் என அன்றே கணித்துள்ளார் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.

"அதானி ஒரு டை பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?
ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?

"என் வார்த்தையை குறித்துக்கொள்ளுங்கள் - அதானி டைபாம் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறது... இது நிற்கும் போது நீரவ் மோடி மற்றும் அவரது கும்பல் தெரு ரவுடிகளைப் போல சாதரணமனவர்களாக தோன்றுவார்கள்" என அவரது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.

இந்த ட்வீட் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதமே போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது இணையவாசிகள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

யார் இந்த சஞ்சீவ் பட்?

2002 குஜராத் கலவரத்தின் போது மோடி அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப்போது உளவுத்துறையில் துணை கமிஷனராகவும் பாதுகாப்பிற்கான பொறுப்பாளராகவும் இருந்தவர் சஞ்சீவ் பட்.

இவர் மோசடி உட்பட சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த அந்த வழக்குகள் புனையப்ப்பட்டவை என்றும், சஞ்சீவ் நேர்மையாளர் என்றும், குஜராத் அரசு குறித்த சில உண்மைகளை பேசியதற்காகவே பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சஞ்சீவ் பட் கூறியவை என்ன?

2002 பிப்ரவரி 27ம் தேதி குஜராத் கலவரம் தொடங்கியபோது முதல்வர் மோடி , "72 மணி நேரத்துக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தட்டும்" எனக் கூறியதாக தெரிவித்தார் சஞ்சீவ் பட்.

மேலும் சிறப்பு விசாரணைக் குழு மோடியைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதாகவும் சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார்.

ஆனால் நீதிமன்றம் அவர் கருத்துக்களை மறுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது.

மேலும் குஜராத் அரசு இவர் மீது வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் சஞ்சீவ் பட் தண்டனைப் பெற்றார்.

"அதானி ஒரு டை பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?
பிரதமர் மோடி தான் குஜராத் கலவரத்துக்கு காரணமா? : பிபிசி ஆவணப்பட விவகாரம் - என்ன நடக்கிறது?

மேலும் குஜராத் கலவர வழக்கில் தொடர்புடையவர்களை, குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க ஆதாரங்களை திரித்து சதிச்செயலில் ஈடுபட்டதாக, செய்தியாளர் டீஸ்டா சீதல்வாட், குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்பி ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சய் பட் ஆகியோர் மீது கடந்த ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் மீண்டு கைது செய்யப்பட்டார்.

இப்போது பிபிசி ஆவணப்படங்கள் தெரிவிக்கும் கருத்துகளை அப்போதே கூறியவர் சஞ்சீவ் பட் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சில கசப்பான உண்மைகளை பேசியதன் விளைவுகளையே சஞ்சீவ் பட் எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

"அதானி ஒரு டை பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?
அதானி குழுமம் : 100 பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை இழந்த அதானி - அடுத்து என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com