அதானி : 3 நிறுவனங்களில் இருந்து விலகிய கௌதமின் அண்ணன் வினோத் அதானி - பின்னணி என்ன?

அதானி குழுமத்தின் மதிப்பை பங்கு சந்தையில் உயர்த்துவதற்காக நூற்றுக்கணக்கான ஷெல் நிறுவனங்கள் வினோத் அதானியால் இயக்கப்பட்டதாக ஜனவரி 24ம் தேதி வெளியான ஹிண்டன்பெர்க் நிறுவன அறிக்கை கூறியது குறிப்பிடத்தக்கது.
அதானி : 3 நிறுவனங்களில் இருந்து விலகிய கௌதமின் அண்ணன் வினோத் அதானி - பின்னணி என்ன?
அதானி : 3 நிறுவனங்களில் இருந்து விலகிய கௌதமின் அண்ணன் வினோத் அதானி - பின்னணி என்ன?Twitter

ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது சுமத்திய புகார்களைத் தொடர்ந்து பல மடங்கு சரிந்துள்ளது அதானி நிறுவனம்.

மாதங்கள் கடந்தாலும் அதானியால் முழுமையாக மீண்டுவர முடியவில்லை. இந்தநிலையில் அதானியின் மூத்த சகோதரர் வினோத், அதானி குழுமம் தொடர்பான மூன்று வணிகங்களில் இருந்து விலகியுள்ளார்.

கார்மிகல் ரயில் (Carmichael Rail), போர்ட் சிங்கப்பூர் மற்றும் அபோட் பாயிண்ட் டெர்மினல் விரிவாக்கம் (Abbot Point Terminal Expansion) ஆகிய நிறுவனங்களில் இருந்து வினோத் அதானி விலகியுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நிறுவனங்களும் அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கத்துடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினாலும் சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட அபோட் பாயிண்ட் துறைமுக நிறுவனத்தின் 'போர்ட் உறுப்பினராக' அவர் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதானி குழுமத்தை அதிகாரிகள் சரிவர கண்காணித்தார்களா என்பதை உறுதி செய்ய ஒரு குழுவை அமைத்தது. இதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் வினோத் அதானி தனது பதவிகளைத் துறந்துள்ளார் என ப்ளூம்பெர்க் குறிப்பிடுகிறது.

அதானி : 3 நிறுவனங்களில் இருந்து விலகிய கௌதமின் அண்ணன் வினோத் அதானி - பின்னணி என்ன?
அதானி குழுமத்தை விரட்டும் பங்குச் சந்தை சரிவுகள் - விடைசொல்லாத ஆளும் அரசு

இதற்கிடையில் செபி அதானி குழுமம் மற்றும் வினோத் அதானிக்கு இடையிலான பரிவர்த்தனையை விசாரித்து வருகிறது.

கார்மிகல் சுரங்க நிறுவனங்களில் வினோத் அதானி எந்த மேலாண்மை பணிகளிலும் ஈடுபடவில்லை என்பதும் அவர் பங்குதாரராக மட்டுமே இருந்துள்ளார் என்றும் ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் மதிப்பை பங்கு சந்தையில் உயர்த்துவதற்காக நூற்றுக்கணக்கான ஷெல் நிறுவனங்கள் வினோத் அதானியால் இயக்கப்பட்டதாக ஜனவரி 24ம் தேதி வெளியான ஹிண்டன்பெர்க் நிறுவன அறிக்கை கூறியது குறிப்பிடத்தக்கது.

அதானி : 3 நிறுவனங்களில் இருந்து விலகிய கௌதமின் அண்ணன் வினோத் அதானி - பின்னணி என்ன?
கெளதம் அதானி : சரிவு இந்தியாவின் இந்த துறையை எப்படி பாதிக்கும் தெரியுமா? விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com