ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை

ஓலா, பேடிஎம், ஸ்னாப்டீல், லென்ஸ்கார்ட் என பல புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியுதவி செய்துள்ளார். அவரது கருத்துகள் மற்றும் சமூக பார்வைக் காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படும் நபராக இருக்கிறார்.
ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை
ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கைTwitter

ரத்தன் டாடா புதுமையான தொழில் முயற்சிகளுக்கு பெயர்பெற்றவர்.

பல இளம் தொழில்முனைவோர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். அதற்கு காரணம் டாடா குழுமத்தில் அவர் கொண்டு வந்த மாற்றங்களும், தொலைநோக்கு திட்டங்களும் தான்.

ஓலா, பேடிஎம், ஸ்னாப்டீல், லென்ஸ்கார்ட் என பல புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியுதவி செய்துள்ளார்.

அவரது கருத்துகள் மற்றும் சமூக பார்வைக் காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படும் நபராக இருக்கிறார்.

இவரது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் போல பலர் பின்தொடர்கின்றனர். இந்த தைரியமான தொழிலதிபரின் இப்போதைய சொத்து மதிப்பு 3,800 கோடி ரூபாய்க்கு மேல் போகும்.

84 வயதிலும் ஹேண்ட்சமான இந்தியன் தாதா போல தோற்றமளிக்கும் ரத்தன் டாடாவின் ஆடம்பர வாழ்க்கை முறைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அவரிடம் உள்ள சொகுசு வாகனங்கள், பங்களாக்கள் பற்றிக்காணலாம்.

1. சொகுசு கார்

ரத்தன் டாடா சிகப்பு நிற ஃபெராரி கலிஃபோர்னியா கார் வைத்திருக்கிறார். இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்வதே இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

2. பிரைவேட் ஜெட்

டசால்ட் ஃபால்கன் 2000 என்ற பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார் ரத்தன் டாடா. இது கம்பேக் பீஸ்ட் என அறியப்படுகிறது. தனது ஜெட் விமானங்களை இயக்கும் உரிமமும் வைத்திருக்கிறார் ரத்தன் டாடா.

ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை
TATA : 1868 முதல் இன்று வரை இந்தியாவுக்கு முன்னோடியாக செய்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?

3. மாளிகை

மும்பையில் ரத்தன் டாடாவுக்கு 15 ஆயிரம் சதுர அடியில் ஏழு தளங்கள் கொண்ட பீச் மாளிகை இருக்கிறது.

கொலாபா என்ற இந்த மாளிகையில் இருந்து அரபிக் கடலின் அழகை ரசிக்கலாம்.

மும்பையில் இருக்கும் விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று.

ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை
டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

4. Maserati Quattroporte

இந்தியாவில் இருக்கும் விலை உயர்ந்த காரான Maserati Quattroporte ஒன்றும் டாடாவிடம் இருக்கிறது.

5. ஃப்ரீலாண்டர்

லேண்ட் ரோவர் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் முன் ரத்தன் டாடா அந்த நிறுவனத்தின் ஃப்ரீலாண்டர் காரை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை
இந்தியாவில் முதல் கார் தயாரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு- இண்டிகாவை கொண்டாடிய ரத்தன் டாடா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com