
வெளியூருக்கு செல்லும் போது பலரும் தங்குவதை விரும்ப மாட்டார்கள். சிலர் படுத்து உறங்க இடம் இருந்தால் போதும் என நினைப்பர். சிலரோ அந்த ஊரில் உள்ள ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்குவதை விரும்புவர்.
3வது நபர்களுக்கானது இந்த பதிவு. இந்தியாவிலேயே ஒரு இரவு தங்க அதிக விலை கேட்கும் ஹோட்டல் உங்களை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தும்.
ராஜஸ்தான் அதிக சுற்றலாப்பயணிகளை ஈர்க்கும் மாநிலம். கலாச்சார மதிப்புவாய்ந்த பெரிய ஹோட்டல்கள் இங்கு அதிகம். இங்கிருந்த பல அரண்மனைகளும் ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
இந்தியாவிலேயே விலையுயர்ந்த ஹோட்டல் ராஜஸ்தானில் தான் அமைந்துள்ளது. ஜெய்பூரில் உள்ள ராஜ் அரண்மனை ஹோட்டல்தான் அது. 300 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனையில் இப்போது தங்கினாலும் நிச்சயமாக ராஜா போன்ற உணர்வைப் பெறுவீர்கள்.
தங்கத்தாலான பொருட்கள், தனியான நீச்சல்குளம், தனியார் அருங்காட்சியகம் என எல்லாமே இங்கே இருக்கும். ராஜஸ்தானின் ராஜா தங்கியிருந்த அறையில் தங்குவதற்கு தான் நாம் அதிக பணம் கொடுக்க வேண்டும்.
அதிக பணம் என்றால் இந்தியாவிலேயே ஒருநாள் தங்க கொடுக்கப்படும் அதிகபட்ச தொகை. 29 லட்சம் ரூபாய்.
அப்படி அந்த ராஜா அறையில் என்ன தான் இருக்கு? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அந்த அரண்மனையில் தங்க வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். அது ஒரு தனி அறை அல்ல, 4 மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்ட். இங்கு தனி நீச்சல்குளமும் மாடியும் உள்ளது.
300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்பூர் மகாராஜா எப்படி தனது வாழ்க்கையை நடத்தியிருப்பார் என்பதை இந்த ஹோட்டலில் அனுபவிக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust