TATA குழுமம் வரலாறு : தொலைத் தொடர்பு துறையில் தோல்வியடைந்த டாடா | பகுதி 28

டாடா குழுமம் தொலைத்தொடர்புத் துறையில் சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் முதலீடு செய்தும் அத்துறையில் நஷ்டமும், கடன்களும், தோல்வியுமே மிஞ்சின.
TATA

TATA

Twitter

உப்பு முதல் உலோகம் வரை, விவசாயப் பொருட்கள் முதல் விமானம் வரை பல துறைகளில் தனக்கென தனி கால் தடம் பதித்த டாடா குழுமத்தால் ஒரு முக்கிய துறையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை எனில் அது தொலைத்தொடர்பு தான்.

டாடா குழுமம் தொலைத்தொடர்புத் துறையில் சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் முதலீடு செய்தும் அத்துறையில் நஷ்டமும், கடன்களும், தோல்வியுமே மிஞ்சின.

1996 ஆம் ஆண்டு டாடா டெலிசர்வீசஸ் என்கிற நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஃபிக்ஸட் லைன் டெலிபோன் சேவை, இணையச் சேவைகளை எல்லாம் வழங்கியது.

2002ஆம் ஆண்டு சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவையை வழங்கத் தொடங்கியது. நாளடைவில் டாடா இண்டிகாம், அகன்ற அலைவரிசை, டாடா போடான் போன்ற சேவைகளையும் வழங்கத் தொடங்கியது.

ஆனால் உலகமோ, சிடிஎமே சேவையைப் பெரிதாகக் கண்டு கொள்ளாமல், ஜிஎஸ்எம் சேவையை நோக்கி அதிவிரைவாகப் பயணித்துக் கொண்டிருந்தது.

DOCOMO 3G

DOCOMO 3G

Twitter

முதல் 3ஜி சேவையை வழங்கிய டாடா நிறுவனம்

ஜிஎஸ்எம் தான் அடுத்து உலக மக்கள் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தொழில்நுட்பம் என்பதைத் தாமதமாக உணர்ந்த டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம், 2008ஆம் ஆண்டு தான் ஜிஎஸ்எம் சேவைக்குள் நுழைந்தது.

அப்போது ஜப்பானை சேர்ந்த என் டி டி டொகொ என்கிற நிறுவனம் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாயை டாட டெலிவசர்வீசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து சுமார் 26 சதவீத பங்குகளை வாங்கியது.

புதிய பலத்தோடு ஒரு நொடிக்கு பைசாவில் பணம் செலுத்துங்கள் என சந்தையை உலுக்கியது. கிராமபுற மற்றும் நகர்புற மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது இத்திட்டம்.

TATA

டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

2010ஆம் ஆண்டு முதன் முதலில் 3ஜி சேவையை வழங்கிய நிறுவனம் என்கிற பெருமையையும் பெற்றது டாடா டொகொமோ. மறுபக்கம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் கடன்கள் பல்லாயிரம் கோடி ரூபாயைத் தொட்டது.

நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்ற பங்குதாரர்

மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் ரசனை காரணத்தால் அடுத்தடுத்து புதிய தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியாமல் திணறியது டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்ட டாடா டோகோமோ.

இப்படி கோடிகளில் பணத்தை வாரி இறைத்தும் சிறப்பாகச் செயல்பட்டு இந்தியச் சந்தையில் ஒரு கணிசமான இடத்தைப் பிடிக்காத காரணத்தினால், 2014ஆம் ஆண்டு டொகோமோ நிறுவனம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குகளை மீண்டும் டாடா நிறுவனத்தை வாங்க நிர்ப்பந்தித்தது. அதன்படி டாடா குழுமம் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பஞ்சாயத்து கூட நீதிமன்றங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராகப் பதவி ஏற்ற பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தது.

நிறையச் செலவு பிடிக்கும் தொலைத்தொடர்புத்துறை வியாபாரத்தில் 2016ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வரவுக்கு பிறகு, நிறுவனங்களுக்கு இடையில் விலை போட்டியும் கடுமையாகத் தொடங்கியது.

TATA Teleservice

TATA Teleservice

Twitter

விற்கப்பட்டது டொகொமோ

டாடா டொகொமோவால், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு தன் விலையைக் குறைத்து வைத்து வியாபாரத்தை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நின்றது.

கடைசியில் எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் தொலைத்தொடர்புத் துறையை லாபகரமாக நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்ட டாடா குழுமம், டாடா டொகொமோவை ஏர்டெல், வோடபோன்ஆகிய நிறுவனங்களிடம் விற்று வெளியேற முயன்றது.

கடன் உட்பட, பல்வேறு காரணங்களால் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேறாமல் போயின. கடைசியாக 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா டொகோமோ நிறுவனத்தைக் கையகப்படுத்த இருப்பதாக ஏர்டெல் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின.

VSNL

VSNL

Twitter

2019 ஜூலையில் டாடா டொகோமோ தன் சேவையை நிறுத்திக் கொண்டது அதிகாரப்பூர்வமாக டாடா டொகொமோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தில் இணைக்கப்பட்டனர். டாடா டொகொமோ ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட போது ஒட்டுமொத்த இந்தியத் தொலைத் தொடர்பு சந்தையில் நான்கு சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களையே வைத்திருந்தது டொகொமோ.

மிச்சமிருப்பது டாடா டெலிசர்வீசஸ் மட்டுமே

டாட்டா டொகொமோ ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட பிறகும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம், கிளவுட் சேவைகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கான இணைய சேவைகள், ஐ ஓ டி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், வாடிக்கையாளர் சேவை, சைபர் பாதுகாப்பு போன்ற சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்தியாவில் பல முன்னெடுப்புகளைச் செய்த, 150 ஆண்டுக் கால வணிக பாரம்பரியத்தைக் கொண்ட டாடா குழுமத்தாலேயே, இந்தியத் தொலைத் தொடர்புத் துறை, வெல்ல முடியாத ஒன்றாகவே இப்போதும் இருந்து வருவது ஆச்சரியம்தான்.

2002ஆம் ஆண்டில், டாடா குழுமம் இந்திய அரசுக்குச் சொந்தமான விஎஸ்என்எல் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கிக் குவித்தது. இந்த விஎஸ்என்எல் தான் இந்தியாவுக்கு இணைய சேவையைக் கொண்டு வந்த பிரதான நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிறுவனம் டாடா கம்யூனிகேஷன்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டது. அந்நிறுவனமும் டாடா டெலிசர்வீசஸ் போல, கிளவுட் சேவைகள், நெட்வொர்க்ச் சேவைகளை வழங்கி வருகின்றன, இருப்பினும் அது கடலடியில் இணைய வடங்களைப் பதித்து இணையச் சேவை வழங்கி வருகிறது.

TATA

டாடா குழுமம் வரலாறு : கோலியின் முன்னேற்றத்திற்கு காரணமான டாடா | பகுதி 27

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com