எலான் மஸ்க்: "Blue Tick" வைத்திருக்க கட்டணம்; ட்விட்டரில் ரீல்ஸ் - புதிய மாற்றங்கள் என்ன?

எலான் மஸ்க் ட்விட்டரின் செலவீனங்களை குறைக்க பணிநீக்கங்களை செய்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இது குறித்து ஒரு ட்வீட்டில் "ட்விட்டரில் ஒரு நபர் கோடிங் செய்வதனை 10 பேர் மேனேஜ் செய்கின்றனர்" என கூறியிருந்தார்.
Twitter இனி "Blue Tick" வைத்திருக்க பணம் கட்ட வேண்டுமா?
Twitter இனி "Blue Tick" வைத்திருக்க பணம் கட்ட வேண்டுமா?டிவிட்டர்

உலகில் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 27ம் தேதி அதிகாரப்பூர்வமாக வாங்கினார்.

மஸ்க் வாங்கியது முதலே பல மாற்றங்களை சந்தித்து வருகிறது ட்விட்டர். அதன் உறுப்பினர் இல்லாதவர்களுக்கான முகப்பு பக்கம் மாற்றப்பட்டிருக்கிறது.

ட்விட்டரின் தூண்களாக இருந்த சிஇஓ பரக் அகர்வால்  தலைமை நிதி அதிகாரி நெட் செகல், தலைமை கொள்கை அதிகாரி விஜயா கடே உள்ளிட்ட சிலரை பணி நீக்கம் செய்துள்ளார் எலான் மஸ்க். இன்னும் பலரை பணி நீக்கம் செய்ய உள்ளார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

எலான் மஸ்க் ட்விட்டரின் செலவீனங்களை குறைக்க பணிநீக்கங்களை செய்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இது குறித்து ஒரு ட்வீட்டில் "ட்விட்டரில் ஒரு நபர் கோடிங் செய்வதனை 10 பேர் மேனேஜ் செய்கின்றனர்" என கூறியிருந்தார்.

Blue Tick

ட்விட்டர் என்ன தான் பிரபலமான சமூக வலைத்தளமாக இருந்தாலும் மூன்றாம் கட்ட நாடுகளில் அதன் வளர்ச்சி கேள்விக்கு உட்பட்டதே. ஏற்கெனவே ட்விட்டரில், ”ட்விட்டர் ப்ளூ” என்ற பிரபலமாகாத சப்ஸ்கிரிப்ஷன் உள்ளது.

ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் மூலம் விளம்பரங்கள் இல்லாமல் செயலியை உபயோகிப்பது உள்ளிட்ட பல வசதிகளைப் பெற முடியும். ஆனாலும் பயனர் அதில் பெரியளவில் விருப்பம் காட்டவில்லை. மிக முக்கியமான கணக்குகள் மட்டுமே ப்ரீமியம் சேவைகளுக்காக ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருந்தனர்.

ப்ளூ சப்ஸ்கிரிப்ஷனுக்காக மாதம் 4.99 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை உயர்த்துவது, சப்ஸ்கிரைப் செய்த வாடிக்கையாளர்களுக்கு ப்ரீமியம் வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்களை எலான் மஸ்க் கொண்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

அத்துடன் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூடிக் வைத்திருக்க பணம் வசூலிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மாதம் 20 அமெரிக்க டாலர்கள் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது ப்ளூடிக் வைத்திருப்பவர்கள் மூன்று மாதத்துக்குள் தங்களின் வெரிஃபிகேஷனை புதுப்பிக்கலாம் அல்லது ப்ளூடிக்கை இழக்க நேரிடும் என செய்திகள் கூறியுள்ளன. ஆனால் இது வரையில் ட்விட்டர் நிறுவனமோ எலான் மஸ்கோ இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Twitter இனி "Blue Tick" வைத்திருக்க பணம் கட்ட வேண்டுமா?
Twitter : CEO பராக் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நீக்கம் - எலான் மஸ்கின் திட்டம் என்ன?

கணக்குகளை சரிபார்த்தல்

ட்விட்டரில் பல கணக்குகள் போலியானவை என்று முன்னரே மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். இந்த போலிக்கணக்குகளை நீக்கும் நடவடிக்கையில் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளார்.

டெஸ்லா எஞ்சினியர்கள் இருவரை ட்விட்டர் ஆலோசகர்களாக நியமித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தலைவராக பதவியேற்றது முதல் இரவு பகலாக ட்விட்டரை நிலைநிறுத்த உழைத்து வருகிறார் மஸ்க். ட்விட்டரை ஒரு சூப்பர் ஆப் -ஆக மாற்ற இன்னும் பல முக்கிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளார் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

குறிப்பாக வைன் (vine) என்ற 6 வினாடி வீடியோக்களை வழங்கும் வசதியை இணைப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இது கிட்டத்தட்ட ரீல்ஸ் போன்றது.

ட்விட்டரை அதிக விலைக் கொடுத்து வாங்கிவிட்டார் மஸ்க் என்ற பேச்சுகளைக் கடந்து தன்னை நிரூபிப்பாரா எலான் மஸ்க் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Twitter இனி "Blue Tick" வைத்திருக்க பணம் கட்ட வேண்டுமா?
Twitter : எலான் மஸ்கின் சாம்ராஜ்யத்தை காலி செய்யுமா? - என்னென்ன சவால்கள் உள்ளன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com