Raksha Bandhan 2022 : ரக்ஷா பந்தன் கொண்டாட இதுதான் காரணமா?

Priyadharshini R

ரக்ஷா பந்தன் பொதுவாக வட மாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை.

உடன் பிறந்தவர்கள் அல்லது சகோதரத்துவ இணைப்பு உள்ளவர்கள் இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது ரக்‌ஷா பந்தன்.

ஒரு பெண், தனது சகோதரனுக்கோ அல்லது அவர் சகோதரனாகக் கருதும் நபருக்கு ராக்கி எனப்படும் புனித நூல் கட்டுவதும், அதற்கு அந்த சகோதரன், “உன்னை நான் என் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன். நான் உன்னை இனி பாதுகாக்கும் அறனாக இருப்பேன்.” எனக் கூறும் நாளாக ரக்‌ஷா பந்தன் தினம் பார்க்கப்படுகிறது.

ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் ஒரு தட்டில் மஞ்சள் குங்குமம் பூக்கள் மற்றும் ராக்கி கயிறு வைத்து தனது சகோதரனுக்கு ஆரத்தி எடுப்பர்

சகோதரனுக்கு இனிப்புகள் ஊட்டி அவருடைய கையில் ராக்கி கயிறு கட்டி பரிசும், ஆசியும் பெறுவார்.

மகாபாரத புராணத்தின்படி ஒருமுறை கிருஷ்ணனின் விரலில் இருந்து ரத்தம் வருவதைக் கண்ட திரெளபதி, தன்னுடைய சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டினார். திரௌபதியைத் தனது சகோதரியாக கிருஷ்ணர் ஏற்றுக்கொண்டார்.

குறிப்பிட்ட சமூகம் மற்றும் இடங்கள் கடந்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.