Love Today நடிகை இவானாவின் உண்மையான பெயர் இதுதான்! 5 Interesting Facts

Priya Rethinam

இவானாவின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி. கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் இவானா. தமிழ் மற்றும் மலையாளமொழிகளில் நடித்துள்ளார் இவனா.

இவர் 2012 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான மாஸ்டர்ஸ் திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமானார்.

இவர் மலையாளத்தில் அனுராகா காரிக்கின் வெல்லம் படத்தில் நடித்துள்ளார் இவானா.

இயக்குனர் பாலாவின் 'நாச்சியார்' தமிழ் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவிற்கு எண்டரி கொடுத்தார்.

தமிழ் மற்றும் மலையாளமொழிகளில் நடித்துள்ள இவனா கிளாமர் சீனில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

தமிழ் ரசிகர்களுக்கு உச்சரிக்க எளிதான மேடைப் பெயர் என்பதற்காக அவரது குடும்பத்தின் சம்மத்துடன் அலீனா ஷாஜி, இவானா என பெயரை மாற்றிக்கொண்டார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தில் நிகிதா என்ற கேரக்டரில் நடித்து இவானா பாராட்டுகளை பெற்றுள்ளார்.

லவ் டுடே படம் ஹிட்டாகியதுடன் இவானாவின் நடிப்பும் கவனம் பெற்றதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

இன்ஸ்டாகிராமில் நடிகை இவானாவை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.